உடல் எடையை குறைக்க, மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க பிரண்டை பொடி எப்படி செய்வது?

pirandai-podi1
- Advertisement -

நார்ச்சத்து அதிகமிருக்கும் இந்த பிரண்டையை நாம் யாரும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது கிடையாது. ஆனால் இதற்குள் அடங்கி இருக்கும் சத்துக்கள் ஏராளம். உடல் எடையை குறைக்க, பித்தத்தை குறைக்க, மூட்டு வலியை நீக்க, இதைவிட ஒரு நல்ல மருந்து வேறு எதுவுமே இல்லை. ஆனால் இதனுடைய அருமை பெருமைகள் நமக்குத் தெரிவதில்லை. சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் நார்ச்சத்து நிறைந்த இந்த பிரண்டையை துவையல் செய்தும் சிலர் சாப்பிடுவார்கள். உங்களுக்கு அதெல்லாம் செய்வதற்கு நேரமில்லை என்றால், இந்த பிரண்டை பொடியை பொடித்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சூடான சாப்பாட்டில் இந்த பொடியை 1 ஸ்பூன் போட்டு, 1/2 ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் போதும். உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. சரி அந்த பிரண்டை பொடி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

pirandai-podi2

பிரண்டை பொடி செய்ய தேவையான பொருட்கள்:
பிரண்டை – 100 கிராம், உளுந்து – 100 கிராம், துவரம் பருப்பு – 50 கிராம், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 10, கருவேப்பிலை – 1 கொத்து, பெரிய நெல்லிக்காய் அளவு – புளி சிறியதாக கிளி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு.

- Advertisement -

முதலில் பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடி செய்வதற்கு பிரண்டையை பிஞ்சாக வாங்கிக் கொண்டால் மிகவும் நல்லது. கொஞ்சம் முத்திய பிரண்டையாக இருந்தால் அதில் நார் இருக்கும். பிரண்டையை கணு உள்ள பகுதிகளில் முதலில் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு, மேலே உள்ள பச்சை நிற தோலை முழுமையாக நீக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

pirandai-podi

அதன் மேலே கொஞ்சம் முள்பகுதி போல இருக்கும். அதை மட்டும் ஒரு கத்தியை வைத்தோ, தோல் சீவுவதை வைத்தோ சீவி எடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அதில் நார் இருக்கும். அரைபடும் போது சிக்கல் வரும். நார் நீக்கிய பிரண்டையை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். சாம்பாருக்கு வெண்டைக்காயை நறுக்கும் சைஸில் வெட்டினால் போதும். இதை தண்ணீரில் போட்டு தண்ணீரை வடிகட்டி, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டையை அந்த எண்ணெயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பிரண்டை எண்ணெய்யில் மூழ்கி இருக்க வேண்டும். பிரண்டை சிவந்து உடையும் அளவிற்கு வறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. (இந்த பிரட்டை வருவட 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை எடுக்கும்.)

pirandai-podi3

வறுபட்ட பிரண்டையை எண்ணெயில் இருந்து நன்றாக வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். (அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் உடனடியாக உண்டு.)

pirandai-podi4

அடுத்தபடியாக அதே கடாயில் எண்ணெய் எதுவும் ஊற்ற தேவையில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், மிளகு, வரமிளகாய், கருவேப்பிலை இந்த எல்லாப் பொருட்களையும் தனித்தனியாக போட்டு இட்லி பொடிக்கு வறுப்பது போல சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் கருக விடாதீர்கள். பொன்னிறம் வரும் வரை, வாசம் வரும் வரை சிவக்க வறுத்து எடுத்து முதலில் வறுத்த பிரண்டை யோடு மொத்தமாக வைத்துவிடுங்கள். இந்த கலவை அப்படியே ஆரட்டும்.

pirandai-podi5

நன்றாக ஆறிய பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, இறுதியாக மிக்ஸி ஜாரில் புளி துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்தால் பிரண்டை பொடி தயார். கமகம வாசத்துடன் ஆரோக்கியமான இந்த பிரண்டை பொடி அரைத்து வைத்து தினமும் சாப்பிட்டாலே, உடல் ஆரோக்கியம் பெறும். உடல் எடை சீக்கிரமே குறையும். உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் இந்தப் பொடியை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -