பிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை

Love kavithai

நம் பிரிவிற்கு பின்
எத்தனையோ கவிதைகளை
நான் எழுதிவிட்டேன்..
ஆனால் அதில் ஒன்று கூட
உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை

காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல கவிதைகள் எழுதி அதை தன் காதலியிடம் சொல்லுவது காலம் காலமாக உள்ள ஒரு வழக்கம். இப்போதும் பல கவிதைகள் வாட்சாப், முகநூல் மூலமாக காதலை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றன. காதலுக்கு கவிதை தான் உற்ற நண்பன் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு காதலும் கவிதையும் பிரிக்க முடியாத ஒன்றாகும்.

கவிதை என்பது காதலிக்கும் போது மட்டும் அல்ல, காதலித்த பிறகும் உதவும், ஒருவேளை காதல் தோல்வியுற்றாலும் கவிதை நமக்கு துணையாக நிற்கும். காதல் தோல்விக்கு பிறகும் பலர் கவிதை எழுதுவார். அந்த கவிதைகள் ஒவ்வொன்றிலும் தன் காதலனோ காதலியோ வாழ்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காதல் தோல்விக்கு பிறகும் கவிதையையும் காதலையும் நேசிக்கும் நல்லுள்ளங்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

Love Kavithai Image
Love kavithai

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.