பித்ரு தோஷம் நீங்க தீப வழிபாடு

amavasai dheepam
- Advertisement -

நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கான வழிபாடுகளை முறையாக செய்வதற்கென ஒதுக்கப்பட்ட நாள் தான் அமாவாசை. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்த முன்னோர்களுக்கு கட்டாயமாக திதி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். இது குடும்பம் தழைத்து வாழ செய்யும் ஒரு முக்கியமான காரியம் என்றே சொல்லலாம்.

ஒரு குடும்பத்தில் முன்னோர் ஆசீர்வாதம் இல்லாமல் அவர்கள் எத்தனை பூஜை வழிபாடுகள் செய்தாலும் அதற்கான பலன் கிடைக்காது என்றே சொல்வார்கள். அதே போல் நம் வீட்டு குலதெய்வம் கூட அவர்களுடைய அனுமதி இன்றி நமக்கு ஆசி வழங்காது என்றும் சொல்லப்படுகிறது.இதன் காரணமாகத் தான் இன்றளவும் முன்னோர் வழிபாடு நாம் முக்கியமானதாக நினைத்து வழிபட்டு வருகிறோம்.

- Advertisement -

அப்படியான இந்த நாளில் நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபம் நம்முடைய குடும்பத்தை தழைத்து வாழ செய்யும் என்று சொல்லப்படுகின்றது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

முன்னோர் சாபம் நீங்க தீபம்

நான் பெரும்பாலான குடும்பங்களை பார்த்திருப்போம் அவர்கள் எப்பொழுதும் துன்பப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். எந்த நல்ல காரியங்களும் அவர்கள் வீட்டில் உடனே நடந்து விடாது. குழந்தை பாக்கியம் இல்லாமல் துன்பப்படுவார்கள். ஆரோக்கிய சீர்கேடு இருக்கும். மொத்தத்தில் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் ஏனோ தானோவென்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலைக்கு அவர்கள் முன்னோர்களின் சாபம் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தங்களின் இந்த நிலைக்கு காரணம் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் இது கிரக கோளாறுகளாக இருக்கலாம். தங்களுடைய கர்மாவின் பலனாக இருக்கலாம். ஒரு வேளை இது முன்னோர் சாபத்தினால் நடப்பதாக இருந்தால் இந்த பரிகாரத்தை செய்தால் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரத்திற்கு நாம் செய்ய வேண்டியது முன்னோர்கள் படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு நாம் மாவு விளக்கு தயார் செய்வது போல பச்சரிசியில் எள் கலந்து மாவு விளக்கு தயார் செய்ய வேண்டும். அதே போல் இதற்கு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை உங்கள் வீட்டில் இறந்தவர்கள் புகைப்படம் இருந்தால் வைத்து அவர்களுக்கு முன்பாக தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அப்படி படம் இல்லாத பட்சத்தில் வரவேற்பறையில் ஒரு சிறிய மனைப்பலகை போட்டு அதில் தெற்கு பார்த்தவாறு இந்த தீபம் எறிய வேண்டும். இந்த தீபமானது அமாவாசை மாலை ஐந்து முப்பது மணியிலிருந்து ஏழு முப்பது மணிக்குள்ளாக ஏற்றிவிட வேண்டும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். மறுநாள் காலை இந்த மாவு விளக்கு தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருள் பெற தீபம்

இது முன்னோர்களின் சாபம் தோஷம் நீங்க கடைபிடிக்கக் கூடிய அற்புதமான சூட்சும பரிகாரம் என்றே சொல்லலாம். முன்னோர் சாபத்தால் துன்பப்படுபவர்கள் இந்த எளிய தீப பரிகார முறை செய்து தங்களுடைய வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும் துயரங்களையும் நீக்கி நிம்மதியாக வாழலாம் என்ற தகவலோடு கருத்தினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -