இறந்து போன பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாதவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன தெரியுமா? இத செஞ்சா பித்ரு தோஷம் அனுகாது, வாழ்வில் நினைத்ததை அடையலாமே!

pithru-tharpanam-karudan
- Advertisement -

தோஷங்களில் மிக வலிமையானது ‘பித்ரு தோஷம்’ என்று கூறலாம். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாதவர்களுக்கு இந்த தோஷம் வந்து சேர்கிறது. இவ்வுலகிற்கு நம்மை கொண்டு வந்த நம்முடைய பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள் இறந்து போன பின்பு நாம் அவர்களுக்கு உரிய ஈம சடங்குகளையும், கர்ம காரியங்களையும், தர்ப்பணங்களும் முறையாக செய்து வர வேண்டும். சிலருக்கு அப்படி செய்யக்கூடிய பாக்கியம் அமைந்திருக்காது அல்லது தெரியாமல் கூட சிலர் இருப்பார்கள். இப்படி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்ய முடியாதவர்கள் எளிதாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? இந்த பரிகாரம் செய்வதால் அவர்களுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பித்ருகளுக்கு மாதம் தோறும் வரும் அமாவாசை திதிகளில் கண்டிப்பாக பூஜை செய்து வந்தால் குடும்பத்தில் பிரச்சனைகளே வராது. அவர்கள் நம்மை காக்கும் அரனாக நம்முடன் இருந்து எப்பொழுதும் அருள் புரிவார்கள். ஆனால் அமாவாசைகளில் அப்படி செய்ய முடியாதவர்கள் தை அமாவாசை, மஹாளைய அமாவாசை போன்ற பெரிய அமாவாசைகளில் திதி, தர்ப்பணங்களை கொடுத்து வர வேண்டும்.

- Advertisement -

அவர்களுடைய நினைவு நாள் மட்டும் அன்றி அவர்கள் இறந்த திதியில் கண்டிப்பாக தர்ப்பணங்கள் கொடுத்து வருவது முறையாகும். அவர்கள் இறந்த பொழுது எந்த திதி இருக்கிறதோ, அந்த திதியில் தான் அவர்கள் மீண்டும் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இது அவர்கள் இறந்த தேதியில் இருந்து முன்னரோ அல்லது பின்னரோ வரக் கூடும். எனவே நினைவு நாளை காட்டிலும் இறந்த திதியில் தான் நீங்கள் திதி, தர்ப்பணங்களை கொடுத்து வர வேண்டும்.

முன்னோர்களுக்கு பித்ரு கடமைகளை செய்வது என்பது மிகப்பெரிய விஷயம் ஆகும். இதை முறையாக கடைப்பிடித்து வருபவர்களுக்கு வாழ்வில் எந்த விதமான பிரச்சனைகளும் நெருங்குவதில்லை. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை தாண்டி நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். உங்களுடைய ஆசைகளும், வேண்டுதல்களும் நிறைவேறிக் கொண்டே வருவதை அனுபவ பூர்வமாக நீங்கள் உணர முடியும்.

- Advertisement -

இத்தகைய பித்ரு சாபத்திற்கு நீங்கள் ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனவர்கள் அல்லது செய்ய முடியாமல் தட்டி கழிப்பவர்கள் யாராகினும் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறையவே பிரச்சினைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து, பித்ரு தோஷம் தீருவதற்கு நீங்கள் முதியோர் இல்லங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை, தானங்களை செய்து வாருங்கள். அது மட்டும் அல்லாமல் அனாதை பிணங்கள் அல்லது ஜீவராசிகளின் சடலங்கள் போன்றவற்றை பார்க்க நேர்ந்தால் அதை முறையாக மண்ணிற்குள் புதைக்க உதவி செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் இந்த செடி இருக்கிறதா? வீட்டில் வளர்க்கும் சிகப்பு நிற பூ பூக்கும் செடிகளுக்கு பணத்தை இருக்கும் சக்தி இருக்கிறதா என்ன?

இந்த ரெண்டு விஷயங்களை நீங்கள் செய்து வரும் பொழுது பித்ரு தோஷங்கள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் யாவும் விலகும். எப்பேர்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து சுலபமாக விடுபடுவதற்கு இந்த பித்ரு பரிகாரம் ரொம்பவே சிறந்த பலன்களை கொடுக்கும். இன்று பலரும் துன்பப்படுவதற்கு அவர்களுடைய முன்னோர்களை கவனிக்காததும் ஒரு காரணமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, எனவே நீங்கள் உங்களுடைய பெற்றோர்கள், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து விடுங்கள்.

- Advertisement -