ரெண்டே வாரத்தில் பொடுகு நீங்கி காடு போல அடர்த்தியான முடி வளர செய்யும் சமையல் கட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியலன்னா தெரிஞ்சுக்க மறக்காதீங்க!

curd-thayir-hair
- Advertisement -

நம் உடம்பில் பல்வேறு இடங்களில் உருவாகக்கூடிய பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சை தொற்றுகள் பலவிதமான பிரச்சனைகளை உண்டு பண்ணுவதில் முதலிடம் வகிக்கிறது. இந்த வகையில் இந்த பாக்டீரியா தொற்று தலை முடியிலும், தலையின் ஸ்கால்ப் பகுதியிலும் தொற்றிக் கொண்டால் முடி உதிர்வது வேகமாக நடக்கும். இந்த பாக்டீரியா கிருமிகளை முற்றிலுமாக ஒழித்து, நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யக்கூடிய அற்புதமான சத்துக்கள் நிறைந்துள்ள இந்த இரண்டு பொருட்கள் நம் சமையல் கட்டியிலேயே ஒளிந்து கொண்டுள்ளது. இந்த ரெண்டு பொருட்களை வைத்து எப்படி பொடுகு தொல்லையை ரெண்டே வாரத்தில் ஒழித்து கட்டுவது? காடு போல அடர்த்தியான முடியை வளர செய்வது? என்கிற அற்புதமான அழகு குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

காடு போல அடர்த்தியான முடி இப்போது பலருக்கும் இருப்பதில்லை. முடி மெலிந்து எலி வால் போல நிறைய பேருக்கு வேதனையை கொடுத்துக் கொண்டிருக்கும். இந்த தலைமுடி பிரச்சனையை ரொம்பவே எளிதாக நீக்குவது தான் இந்த இரண்டு பொருட்களுடைய வேலையாகவும் இருக்கிறது. தலை முடி வளர செயற்கை எண்ணெகள் மற்றும் செயற்கை வழிமுறைகளை கையாளாமல் இயற்கையாகவே சரி செய்வது தான் ஆரோக்கியமானது.

- Advertisement -

முதலில் ரெண்டு முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் இரண்டு முட்டை, ஆண்களாக இருந்தால் ஒரு முட்டை போதும். இதை ஆண், பெண் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ரெண்டு முட்டையின் உடைய வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். முட்டையுடைய மஞ்சள் கருவை நீங்கள் தலைக்கு தேய்த்தால் தான் ஒரு விதமான நீச்ச நாற்றம் அல்லது துர்நாற்றம் வீசும்.

முட்டை பயன்படுத்த தயங்குவதன் காரணமும் இந்த நாற்றம் தான் எனவே முட்டையினுடைய மஞ்சள் கருவை விட்டுவிட்டு வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அதே அளவிற்கு சமமாக டீஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிருடன் முட்டை சேரும் பொழுது நல்ல ஒரு கன்சிஸ்டெண்சி கிடைக்கும். இதை பீட்டர் கொண்டு பீட் செய்ய தேவையில்லை. உங்களுடைய கைகளில் இருக்கும் விரல்களாலேயே எடுத்து எடுத்து கலந்து விடுங்கள். நன்கு ஒன்றுடன் ஒன்று முட்டையும், தயிரும் கலந்த பின்பு உங்களுடைய தலைமுடி இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னுவதற்கு வகிடு எடுப்பது போல இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். பின்னர் தலையில் இருக்கும் ஸ்கால்ப் பகுதியில் இருந்து தலைமுடியின் நுனி வரை மேலிருந்து கீழ் புறமாக விரல்களால் ஜிக்ஜாக் போல அசைத்துக் கொண்டு தடவை வர வேண்டும். தலையின் வேரிலிருந்து தான் நமக்கு முடியானது உதிர்கிறது. அதே போல வேர் பகுதியில் தான் பாக்டீரியா தொற்றுக்களும் நிகழ்கிறது எனவே அங்கிருந்து கீழ் வரை நீங்கள் மசாஜ் செய்தபடி தடவி வர வேண்டும். பத்து நிமிடத்தில் உங்களுடைய தலைமுடியில் இருக்கும் முட்டை ஆனது இருக பிடித்துக் கொள்ள ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் தலைமுடியை சாதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அந்த காலத்து ஆன்ட்டி ஏஜிங் கிரீம்! முகத்துக்கு மட்டும் எந்த கிரீமும் பயன்படுத்தாமல் இதை தடவினால் போதும் என்றுமே நம் தோல் சுருங்காமல் இளமையுடன் இருக்குமா என்ன?

முட்டை பயன்படுத்துபவர்கள் ஷாம்பூவை பயன்படுத்தும் போது நேரடியாக தலைமுடிக்கு ஷாம்பூவை தடவாமல், சிறிதளவு தண்ணீரில் ஷாம்புவை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி தலையை அலசிக் கொள்ளுங்கள். இது போல வாரம் ஒரு முறை மட்டும் நீங்கள் செய்து வந்தாலே தலைமுடியில் இருக்கும் பாக்டீரியா தொற்றுகள் நீங்கி பொடுகு முற்றிலுமாக ரெண்டே வாரத்தில் காணாமல் போய்விடும். அதன் பிறகு உங்களுடைய முடி உதிர்வு மெல்ல மெல்ல நின்று தலைமுடியானது அடர்த்தியாக வளர துவங்கும். தயிருக்கு பதிலாக தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -