பொங்கல் அன்று பொங்கல் செய்ய புதிய மண்பானை தான் வாங்கணுமா? ஏன் குக்கரில் பொங்கல் வைக்கக் கூடாதா?

pongal-panai2
- Advertisement -

தமிழரின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய இந்த பொங்கல் பண்டிகை ரொம்பவும் முக்கியமான ஒரு பண்டிகையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு அம்சமே இதில் நாம் புதிதாக வாங்கக்கூடிய பொங்கல் பானை தான் என்று கூறலாம். ஆனால் இன்று பெரும்பாலான இல்லங்களில் குக்கரிலும், எவர்சில்வர் பாத்திரங்களிலும் பொங்கல் வைத்து சாமி கும்பிடுகின்றனர். இது சரியா? தவறா? என்பதைத் தான் இந்த ஆன்மீக குறிப்பு பகுதியின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

முந்தைய காலங்கள் முதற் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று மண் பானை, வெண்கலம் அல்லது பித்தளையில் மட்டுமே பொங்கல் வைத்து முறையாக சூரிய பகவானுக்கு வழிபட்டு வந்தனர். குறிப்பாக புது பானையில் பொங்கல் வைப்பது தான் தமிழர் உடைய பாரம்பரிய பொங்கல் வழிபாடாகும். இதனை மாற்றி அமைத்து நீங்கள் குக்கரில் பொங்கல் வைத்து கொண்டாடினால் உங்களுக்கு மனதிருப்தி இருக்குமா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த ஒரு விஷயத்தையும் முறைப்படி கையாளும் போது தான் நமக்கு முழு திருப்தியும் ஏற்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை அன்று புது பானை வைத்து பாரம்பரிய முறைப்படி சூரிய பகவானுக்கு தெரியும்படி வெட்ட வெளியில் சரியான நேரத்தில் குலவை சத்தம் எழுப்பி பொங்கலை பொங்க விட்டு பொங்கலோ பொங்கல் என்று கத்தி புது உடைகளை உடுத்தி கொண்டாடும் பொழுது தான் மனமும் மகிழ்ச்சியில் நிறைகிறது.

புது பானை வாங்கும் பொழுது உங்கள் குடும்பத்திற்கு தேவையான அளவிற்கு பொங்கல் செய்யும் படியாக சிறிய முதல் பெரிய அளவுகள் வரை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அப்படி பானை வாங்கும் பொழுது அதில் விரிசல்கள் அல்லது ஏதாவது கொத்துகள் விழுந்து இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். எல்லா பானையும் சரியாக, நேர்த்தியாக இருக்கும் என்று கூற முடியாது. நீங்கள் தான் பானையை வாங்கும் பொழுது இவற்றை கவனித்து வாங்க வேண்டும்.

- Advertisement -

பானை வாங்கும் பொழுது நகத்தை வைத்து தட்டிப் பாருங்கள். அப்படி நீங்கள் தட்டி பார்க்கும் பொழுது கனத்த ஓசை வர வேண்டும். அப்படி வரும் பொழுது தான் நன்கு சுட்ட மண்ணால் செய்த பானை என்று அர்த்தம் ஆகும். முதல் முதலில் பானை வாங்குபவர்கள் மண்ணால் செய்யப்பட்ட எந்த சட்டியை வாங்கினாலும் முதலில் தண்ணீரில் மூழ்கி இருக்கும்படி பானையை வைக்க வேண்டும். அப்பொழுது தான் பானைக்குள் இருக்கும் மண்ணும், வெளியே இருக்கும் மண்ணும் தண்ணீரில் கரையும்.

அதன் பிறகு நீங்கள் லேசாக ஸ்கிரப்பர் அல்லது தேங்காய் நார் போன்றவற்றை கொண்டு தேய்த்து கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் நன்கு கழுவி சுத்தம் செய்து காய வைத்து உபயோகப்படுத்துவது தான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் அப்படியே சமைக்கும் பொழுது சமையலில் மண் கலந்து விட வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

புதுப் பானையில் பொங்கல் வைக்கும் பொழுது அதை எச்சில் படாத பாத்திரமாக இருப்பதால் பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது எனவே தான் நீங்கள் குக்கர் அல்லது எவர்சில்வர் போன்ற பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
கணவர் வெளியே கிளம்பும்போது, மனைவியின் கையால் இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டால், அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டும்.

எந்த ஒரு பூஜை முறையிலும் எச்சில் படாத பாத்திரத்தை பயன்படுத்தும் பொழுது தான் அதற்கான முழு பலனும் கிடைக்கும். மஞ்சள் கொத்தை கழுத்தில் கட்டி, சந்தன குங்குமம் இட்டு, பானையின் அடியில் ஈர மண்ணை தடவி பொங்கல் வையுங்கள். அப்போது தான் கரி பிடிக்காமல் இருக்கும். பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் பொங்கி வழியும் பொழுது குடும்பத்துடன் கூச்சலிட வேண்டும். இதனால் நம்முடைய வாழ்க்கையும் அனைத்து விதமான வளங்களும், நலன்களும் பெறும் என்பது நம்பிக்கை மற்றும் ஐதீகமாக இருந்து வருகிறது.

- Advertisement -