மல்லிப்பூ, காக்கட்டான், பிச்சி பூ போன்ற பூச்செடிகள் மொட்டுக்கள் உதிராது கொத்துக் கொத்தாக பூக்கள் வைக்க நீங்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள் போதுமே!

vazhai-poo-plants
- Advertisement -

வீட்டில் தலைக்கு வைத்துக் கொள்ள மல்லிப்பூ, காக்கட்டான், பிச்சி பூ போன்ற வெள்ளை நிற பூக்களையும் மற்ற அனைத்து பூச்செடி வகைகளையும் கொத்துக் கொத்தாக பூக்கள் செய்யும் சத்து எதில் உள்ளது? பத்து பைசா செலவில்லாமல், நாம் தேவையில்லை என்று தூக்கி எறியும் இந்தப் பொருளுக்கு இவ்வளவு சத்துக்கள் இருக்கும் பொழுது எதற்கு காசு கொடுத்து உரம் வாங்க வேண்டும்? வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே மொட்டுக்கள் உதிராமல், ஒவ்வொரு கிளையிலும் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் தள்ளுவதற்கு என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

மல்லி செடி, நித்திய மல்லி, முல்லை, காக்கட்டான், பிச்சி போன்ற பெண்கள் விரும்பும் பூச்செடிகள் வீட்டில் வைப்பவர்கள் முதலில் மண் கலவை பாதியும், மீதி 50 சதவீதம் தேங்காய் நார் மற்றும் காய்ந்த இலைகளை கொண்டு உருவாக்கப்பட்ட உரத்தையும் கலந்து நட்டு வைப்பது நல்லது. பூச்செடிகளுக்கு மண் எப்பொழுதும் இறுக்கமாக இல்லாமல், அதற்கு சுலபமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு தளர்வாக பொலபொலவென்று இருக்க வேண்டும்.

- Advertisement -

மனிதனுக்கு மட்டுமல்ல, செடி, கொடிகளுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைத்தால் தான் அது ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை நமக்கு கொடுக்கும். எனவே அதிக இறுக்கமாக இல்லாமல், பொலபொலவென உதிர்த்தால் உதிரும் அளவிற்கு இருக்க வேண்டும். நட்டு வளர்த்த பூச்செடி மொட்டுக்கள் காய்க்க துவங்கியதும் அந்த மொட்டுக்கள் செடிகளில் நிற்காமல் சிலருக்கு கொட்டிவிடும் பிரச்சனை ஏற்படும். இப்படி மொட்டுக்கள் கொட்டி விட்டால் அதற்கு தேவையான பொட்டாசியம் சத்து இல்லை என்று அர்த்தம்.

பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள வாழைப்பூ நமக்கு எத்தகைய பூச்செடிகளுக்கும் நல்ல உரமாக அமைந்துள்ளது, எனவே வாழைப் பூவை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அதன் நரம்பு மற்றும் இதர தேவை இல்லாத பகுதிகள் அத்தனையையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்சியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவின் தோல் பகுதி கூட நல்ல ஒரு ஊட்டச்சத்து தான். அரைத்து எடுத்த இந்த விழுதினை அரை லிட்டர் அளவிற்கு நீர் மோரில் கலந்து இரண்டு நாட்கள் புளிக்க விட வேண்டும்.

- Advertisement -

இரண்டு நாட்கள் நுரை தள்ள நன்கு புளித்த பின்பு அதை 20 லிட்டர் அளவிற்கு தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த இந்த கலவையை உங்கள் வீட்டில் பூத்துக் குலுங்க வேண்டிய பூச்செடிகளுக்கு வேரை சுற்றிலும் நன்கு உரமாக அள்ளி தாராளமாக ஊற்ற வேண்டும். இவ்வாறு வாரம் முறையாவது செய்து வர, ஒரு பிரச்சனையும் இல்லாமல் உங்களுடைய எல்லா பூச்செடிகளும் நன்கு பெரிய பெரிய பூக்களாக பூத்து மலரும்.

அதே போல வாழைப் பூ இல்லாத சமயங்களில் 20 லிட்டர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் 4 ஸ்பூன் வெல்லம் சேர்த்து இரண்டு நாட்கள் அப்படியே புளிக்க விட்டு விட வேண்டும். நன்கு புளித்து நுரைக்க ஆரம்பிக்கும் பொழுது அதை ஒரு செடிக்கு அரை லிட்டர் வீதம் எல்லா வகையான பூச்செடிகளுக்கு கொடுத்து வர பூச்செடிகள் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல், நல்ல ஊட்டச்சத்து கிடைத்து செழித்து வளரும்.

- Advertisement -