பூஜை பாத்திரங்களை இனி கஷ்டப்பட்டு தேய்கவே தேவையில்லை! இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க. ஒரு நிமிஷத்துல உங்க பூஜை பாத்திரம் புதுசு போல பளபளக்கும்.

- Advertisement -

நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் காமாட்சி அம்மன் விளக்கு, பஞ்ச பாத்திரம், தூபக் கால், மணி, இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமான விஷயமாக தான் இருக்கும். ஏனென்றால் பித்தளை பாத்திரங்கள், செம்புப் பாத்திரங்கள் இவைகளை பளபளப்பாக தேய்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அந்த காலத்தில் புளி, தேங்காய் நார் இவைகளைப் போட்டு அழுத்தம் கொடுத்துத் தான் இப்படிப்பட்ட பொருட்களை சுத்தம் செய்வார்கள்.

pooja-items

உங்களுடைய வீட்டு பூஜை பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற ஒரு சுலபமான வழியை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனி கைவலிக்க தேய்க்க வேண்டாம். கஷ்டப்பட வேண்டாம். சுலபமாக பாசி பிடித்த பூஜை பொருட்களை கூட, சீக்கிரமாவே சுத்தம் செய்துவிடலாம். வாங்க அந்த சூப்பர் டிப்ஸை இப்பவே தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தளதளவென கொதித்த பின்பு, அடுப்பை அணைத்து விடுங்கள். நீங்கள் இதில் ஊற்றும் தண்ணீர் கட்டாயம் நல்ல தண்ணீராக தான் இருக்க வேண்டும். உப்பு தண்ணீராக இருக்க கூடாது.

pooja-vessels1

பூஜை பாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஒரு எலுமிச்சைப் பழமோ அல்லது இரண்டு எலுமிச்சை பழங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து இருக்கிறீர்கள் அல்லவா? 1 லிட்டர் தண்ணீர் இருந்தால், ஒரு எலுமிச்சை பழம் பயன்படுத்தலாம். 2 லிட்டர் தண்ணீர் எடுத்தால் 2 எழுமிச்சம்பழம் பயன்படுத்தலாம்.

- Advertisement -

உங்கள் பூஜை பாத்திரங்கள் முழுகும் அளவிற்கு, அந்த தண்ணீர் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போது பழுத்த எலுமிச்சை பழத்தின் சாரை ஒரு சிறிய கிண்ணத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத் தோலையும், துண்டு துண்டாக கத்திரிக்கோலால் வெட்டி அதே கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

lemon-peal

அடுத்தபடியாக கொதிக்கின்ற தண்ணீரை கீழே இறக்கி வைத்திருக்கிறோம் அல்லவா? அதில் இந்த எலுமிச்சை பழச் சாறையும் துண்டு துண்டாக வெட்டி வைத்திருக்கும் எலுமிச்சம் பழத் தோலையும் போட்டு விடுங்கள். ஒரு கரண்டியை விட்டுக் கலக்கி விட்டு, உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை இந்த தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற விட்டு விட வேண்டும்.

- Advertisement -

pooja-vessels2

சுடு தண்ணீர் தண்ணீர் ஆறும் வரை, இந்த பூஜை பாத்திரங்கள், அந்தத் தண்ணீரில் ஊற வேண்டும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சாதாரண பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப்பை கொண்டு, இந்த பூஜை பாத்திரங்களை மெதுவாக சாதாரண பாத்திரங்கள் தேய்ப்பது போல செய்தாலே போதும். உங்கள் பூஜை பாத்திரம் பலபல பாவத்தை உங்களால் நம்பமுடியாது. (சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு, எலுமிச்சை பழத்தோல் இவைகளை போடுகிறீர்கள். அந்த தண்ணீரில் பூஜை பாத்திரங்களை போட்டு ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு, அந்த பூஜை பாத்திரங்களை சாதாரணமாக பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து கழுவி விட போகிறீர்கள். அவ்வளவு தான்.)

pooja-vessels3

அதன் பின்பு இந்த பாத்திரங்களை நல்ல தண்ணீரில் ஒரு முறை கழுவி, சுத்தமான காட்டன் துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். சுடுதண்ணியில் இருக்கும் எலுமிச்சை பழச்சாறு உங்கள் பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தி அசத்தும் என்பதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. உங்க வீட்டில் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணிக்கோங்க!

இதையும் படிக்கலாமே
தீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார். விநாயகரை இப்படி மட்டும் வழிபாடு செய்தால் கைமேல் பலனை அடையலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -