பூஜை அறையில் தவறியும் தரையில் வைத்து வழிபடக்கூடாத பொருட்கள்

ammanl-3

நம்மை இந்த உலகத்தில் படைத்து, பாதுகாத்து வரும் அந்த கடவுளின் அருளை பெறுவதற்காக நம் வீட்டில் செய்யும் எந்த ஒரு பூஜைக்கும் பலன் நிச்சயம் உண்டு. இதுவரை நாம் செய்த பூஜையில் அறிந்தும், அறியாமலும் சில தவறுகளை செய்திருக்கலாம். அறியாமல் நாம் செய்யும் சில தவறுகளால் நமது பிராத்தனை முழுமை அடையாமல் போகலாம். அந்த வகையில் நாம் வீட்டில் பூஜை செய்யும் பொழுது எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து வணங்கவே கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Sivan lingam

பொதுவாக நம் வீட்டு பூஜை அறையில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவதை தவிர்ப்பது நல்லதாகும். ஏனென்றால் லிங்க வழிபாட்டிற்கு முறையான பூஜைகளும் புனஸ்காரங்கள் அவசியமானது. நீங்கள் உங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுபவர்களாக இருந்தால், அந்த லிங்கத்தை கண்டிப்பாக தரையில் வைத்து வழிபடக்கூடாது. ஏதாவது ஒரு மரப்பலகையிலோ அல்லது  தாம்பாளத்திலோ  வைத்து தான் வழிபட வேண்டும்.

பூணூல் என்பது நாம் சாஸ்திரத்தில் புனிதமாக கருதப்படும் ஒன்றாகும். இதனை நாம் பூஜைக்கு பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக தரையில் வைக்கவே கூடாது.

லட்சுமி தேவி குடிகொண்டிருக்கும் ஒரு பொருள் தான் சங்கு. இந்த சங்கினை நம் வீட்டு பூஜை அறையில், தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாது. அப்படி தரையில் வைத்திருந்தால் அது நமக்கு அதிகப்படியான பண கஷ்டத்தை கொடுக்கும்.

சங்கு

- Advertisement -

தினமும் நம் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்றும் பழக்கத்தை நாம் வழக்கமாக கொள்ள வேண்டும். இது நம் வீட்டிற்கு பல நன்மைகளை தேடித் தரும். நாம் ஏற்றக்கூடிய விளக்கினை எப்பொழுதும் தரையில் வைத்து ஏற்றக்கூடாது. சுத்தமான பாத்திரத்திலோ அல்லது அல்லது ஒரு சிறிய தாம்பாள வடிவிலான தட்டின் மீது வைத்துதான் ஏற்றவேண்டும்.

தங்கத்தில் லக்ஷ்மி தேவி குடியிருக்கிறாள் என்பது ஐதீகம். தங்கத்தினாலான மகாலட்சுமி நாணயத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுபவர்கள், அதனை தரையில் வைத்து வழிபடக்கூடாது. தங்கத்திலான ஆபரண அணிகலன்களை நம் படுக்கையின் மீது வைக்கக்கூடாது. அது நமக்கு துரதிஷ்டத்தை தேடித்தரும்.

Gold rate in Saravana stores

நாம் இங்கு குறிப்பிட்டுள்ள இந்தத் தவறுகளையெல்லாம் இனி மறந்தும்கூட உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்து விடாதீர்கள். நாம் பூஜையில் அறியாமல் செய்த தவறுகளை மன்னித்து, நமக்கு அருளினை வழங்க அந்த இறைவனை பிரார்த்திப்போம்.

இதையும் படிக்கலாமே:
ராகு காலத்தில் வீட்டில் விளக்கேற்றலாமா?

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.