பூஜை பாத்திரங்கள் தங்கம் போல தகதகவென்று மின்னவதோடு, ஒரு மாதம் ஆனாலும் அதே ஜொலிப்புடன் இருக்க இந்த சின்ன பொருள் போதும். அது என்னன்னு தெரிஞ்ச நீங்களும் ரொம்பவே ஆச்சரியப்படுவீங்க.

poojavessels
- Advertisement -

வெள்ளி கிழமை, விசேஷ நாட்கள் என்றால் பூஜை பாத்திரங்களை எல்லாம் தேய்த்து சுத்தப்படுத்துவதை நினைத்து பெண்கள் கொஞ்சம் கலங்க தான் செய்வார்கள். இந்த பூஜை பாத்திரங்களை எப்படி தேய்த்து சுத்தம் செய்தாலும் தேய்க்கும் போது மட்டுமே பளிச்சுன்னு இருக்கும். அப்புறம் மறுபடியும் கருத்து போய் விடும். அதை திரும்பவும் தேய்ப்பது மிகப் பெரிய வேலையாக தான் இருக்கும். பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று இருந்தால் தான் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பூஜை செய்யும் போதும் மன திருப்தியாக இருக்கும். இந்த பூஜை பாத்திரங்களை எப்படி தேய்த்தால் தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும் என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் அதில் இருக்கும் எண்ணெய் மற்றும் திரிகள் அனைத்தையும் எடுத்து விட்டு ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள். அடுத்து ஒரு எலுமிச்சை பழ அளவு புளி எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த புளி கரைசலுக்கு தேவையான கோல மாவு பொடியையும் இதில் கலந்து பேஸ்ட் போல குழைத்து கொள்ளுங்கள். இப்போது தான் பூஜை பொருட்களை பளப்பளப்பாக செய்யும் பொருளை சேர்க்கப் போகிறோம். அது வேறு ஒன்றும் இல்லை டொமேட்டோ கிட்சப் தான்.

- Advertisement -

இந்த டொமேட்டோ கிட்சப் கடைகளில் ப்ரைட் ரைஸ் வாங்கும் போது கொடுப்பார்கள். பெரும்பாலும் அதை பயன்படுத்தாமல் கீழே தான் தூக்கிப் போட்டு விடும். இனி அது போல செய்யாமல் அதை எல்லாம் எடுத்து சேகரித்து வைத்துக் கொண்டால் பூஜை பாத்திரங்கள் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டொமேட்டோ கிட்சப் தனியாகவும் கடைகளில் கிடைக்கும் அப்படியும் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

இப்போது கலந்து வைத்திருக்கும் புளி, கோலமாவு கலவையில் இந்த டொமட்டோ கிட்சபை கலந்து விடுங்கள். இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். இதை பூஜை பாத்திரங்களின் மீது தேய்த்து இரண்டு நிமிடம் வரை அப்படியே விட்டு விட்டு தேங்காய் நாரை வைத்து லேசாக தேய்த்துப் பாருங்கள். விளக்குகள் அனைத்தும் புதிதாக வாங்கியது போல மின்ன ஆரம்பிக்கும்.

- Advertisement -

புளியும், கோலமாவும் சேர்த்து தேய்த்தாலே விளக்கு பளிச்சென்று ஆகி விடும். இதில் கிட்சப் எதற்கு என்று உங்களுக்கு தோன்றலாம். இந்த பொருளை இதில் சேர்த்து தேய்க்கும் போது விளக்குகள் சீக்கிரத்தில் கறுப்படைந்து விடாமல் ஒரு மாதமானாலும் பளிச்சென்று இருக்க இந்த பொருள் உதவி செய்யும். இதையும் சேர்த்து தேய்க்கும் பூஜை பாத்திரங்கள் மின்னுவதுடன் அதிக நாட்கள் அதே பளப்பளப்புடன் அப்படியே இருக்கும்.

இதே முறையில் வீட்டில் இருக்கும் செப்பு பாத்திரங்களை கூட தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தற்க்கு காரணம் அதை தேய்த்து எடுப்பது கடினம் என்று தான். இந்த முறையில் தேய்க்கும் போது ரொம்ப சுலபமாகவே தேய்த்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ஒரு மணி நேரம் வேகற அரிசியை கூட பத்து நிமிஷத்துல குக்கரில் அதுவும் உதிரி உதிரியா வடிச்சு சமைக்கலாம் தெரியும்மா ? இது தெரியாம இத்தனை நாள் டைம் வேஸ்ட் பண்ணிட்டோமே கண்டிப்பா பீல் பண்ணவிங்க.

இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இனி வீட்டில் பூஜை பாத்திரங்கள், செப்பு பாத்திரங்கள் தேய்க்கும் போது பயன்படுத்திப் பாருங்கள். பூஜை பாத்திரங்கள் எல்லாம் தங்கம் போல ஜொலிக்கும்.

- Advertisement -