பூஜை அறையில், பூ வைக்காமல் சாமி கும்பிடலாமா? பூஜைக்கு பூ கிடைக்காத சமயத்தில் என்ன செய்வது?

poojai
- Advertisement -

பூஜை என்றால் நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது புஷ்பங்கள். வாசனை நிறைந்த பூக்கள் இல்லை என்றால் நம்முடைய பூஜை நிறைவடைந்தது போல ஒரு திருப்தியே இருக்காது. ஆனால் தினமும் சுவாமி படங்களுக்கு புதுசாக பூ வைப்பது சில பேருக்கு சில சிரமங்கள் இருக்கிறது. அந்த காலத்தில் எல்லாம் வீட்டிற்கு முன்பாகவே பூ செடிகளை வளர்த்து வருவார்கள். தினமும் அந்த பூக்களை பறித்து சுவாமிக்கு புதுசாக சூட்டி வழிபாடு செய்து வந்தார்கள். அதில் முழுமையான மனநிறைவும் கிடைத்தது. ஆனால், இன்றைய சூழ்நிலை ஒரு சில சமயங்களில் பூக்கள் கிடைப்பது கிடையாது.

அப்படியே கிடைத்தாலும் சீசன் இல்லாத சமயத்தில் பூக்களின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில் என்ன செய்வது. வாடிய பூக்களை அப்படியே சுவாமி படங்களில் வைத்து பூஜை செய்யலாமா அல்லது பூக்களே இல்லாமல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாமா, இந்த கேள்விகளுக்கான தெளிவான ஆன்மீகம் சார்ந்த விளக்கத்தினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பூஜை சமயத்தில், பூ இல்லாத போது என்ன செய்வது?
பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு பூஜை அறையில் இருக்கும் வாடிய பூக்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, ஊதுவத்தி சாம்பலை எல்லாம் எடுத்துவிட்டு, பூஜை அறையை முழுமையாக சுத்தம் செய்து விட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். புதுசாக பூ இல்லை என்றாலும் வாடியப் பூக்களை ஒருபோதும் சுவாமி படங்களுக்கு வைத்து விளக்கு ஏற்றாதீர்கள். இன்றைக்கு வைத்த பூ நாளைக்கு வாடி விட்டால் அதை எடுத்து விடுங்கள்.

ஆனால் விளக்கு ஏற்றி சுவாமி கும்பிடும்போது பூஜை அறையில் பூ இல்லையே என்ற மன கவலை நிச்சயம் நமக்கு இருக்கும். பூ வைக்காமல் விளக்கு ஏற்றுவதற்கு சிலருக்கு மனசு இருக்காது. அப்படி இருக்கும்போது என்ன செய்வது. பெரும்பாலும் இப்போது நிறைய வீடுகளிலும் துளசி செடி வளர்க்கும் பழக்கம் இருக்கிறது. அந்த துளசி செடியிலிருந்து இரண்டு இலைகளை பறித்து பூஜையறையில் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள். பூவே இல்லை என்றாலும் நீங்கள் பூ வைத்து பூஜை செய்த பலனை முழுமையாக பெறலாம்.

- Advertisement -

சில பேர் வீட்டில் துளசி செடி இல்லை என்றால் என்ன செய்வது. வாசம் நிறைந்த பூக்களுக்கு உள்ள மகிமை மணமணக்கும் சந்தனத்திற்கு உள்ளது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சமாக சந்தனம் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து பூஜை அறையில் வைத்து விட்டு பூஜையை நீங்கள் செய்யலாம். இந்த சந்தனத்தின் வாசம் பூக்கள் இல்லாத குறையை தீர்த்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடியும் என்றால் கொஞ்சம் வாசனை நிறைந்த பன்னீரை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த சந்தனத்தில் பன்னீர் ஊற்றி சுவாமி அறையில் வைத்துவிட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு பூஜை இறுதியில் அந்த சந்தனத்தை தொட்டு நெற்றியில் வைத்துக் கொள்வது அவ்வளவு பாசிட்டிவ் வைப்ரேஷனை கொடுக்கும். நீங்கள் பூஜை செய்த மன நிறைவை முழுமையாக பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: உங்களிடம் குண்டுமணி தங்கம் இருந்தாலே போதும். அதன் மீது இதை ஒரே ஒரு சொட்டு தடவி விட்டால் நீங்களே வேண்டாம் என தடுத்தாலும் உங்களை தேடி தங்கம் வந்து கொண்டே இருக்கும்.

இனி பூஜைக்கு பூ இல்லையே என்ற கவலையோடு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யாதீர்கள். மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி பாருங்கள் நிச்சயம் பூஜை செய்த மகிழ்ச்சியை மனநிறைவை முழுமையாக பெறுவீர்கள் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -