பூஜை அறையில் கட்டாயம் வைக்கக் கூடாத பொருட்கள் என்னென்ன? பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் என்ன நடக்கும்?

pooja-room0
- Advertisement -

பொதுவாக பூஜை அறையை நாம் எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அதே அளவிற்கு குடும்பத்தில் நிம்மதியும் அதிகமாக இருக்குமாம். பூஜை அறை பளிச்சென்று இருந்தால் தான், வாழ்க்கையும் பளிச்சென்று பிரகாசிக்கும். பூஜை அறையில் இந்தந்த பொருட்கள் தான் இருக்க வேண்டும். எந்தெந்த பொருட்கள் இருக்க கூடாது? என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் கட்டாயம் வைக்கக் கூடாத பொருட்கள் என்னென்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

candle

பல பேர் பூஜை அறையில் விளக்கு ஏற்ற தீப்பெட்டியை வைத்திருப்பார்கள். பூஜை அறையில் தீப்பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் தீப்பெட்டியுடன் மெழுகுவர்த்தி, லைட்டர் போன்ற பொருட்களை சேர்த்து வைக்கக் கூடாது. தீப்பெட்டியுடன் மெழுகுவர்த்தி இருந்தால் எடுக்க சுலபமாக இருக்கும் என்று பலரும் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் தீப்பெட்டியுடன் பூஜை அறையில் மெழுகுவர்த்தி இருக்கக் கூடாது. அதனை தனி ஒரு அறையில் வைத்துக் கொள்வது தான் நல்லது. அதே போல சமையல் அறையில், பூஜை அறை வைத்திருப்பவர்கள் அவசரத்திற்கு லைட்டர் போன்ற பொருட்களை எல்லாம் தூக்கி வைப்பார்கள். இதுவும் மிகவும் தவறான ஒரு விஷயமாகும்.

- Advertisement -

பூஜை அறையில் எப்பொழுதும் உயிரோட்டமுள்ள பொருட்கள் தான் இருக்க வேண்டும். மற்ற எந்த விதமான பொருட்களும் அங்கு இருப்பதை கூடுமானவரை நாம் தவிர்ப்பது மிகவும் நல்லது. முதல் நாள் பூஜை செய்யும் போது ஊதுபத்தி கொளுத்தி வைத்திருப்போம். அதன் சாம்பல் கீழே அப்படியே கிடக்கும். அதனை மறுநாள் நீங்கள் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் அப்புறப்படுத்தி விட்டு தான் பூஜையை துவங்க வேண்டும்.

oothupathi

ஊதுபத்தி புதிதாக இருக்கும் பொழுது அதற்கு ஜீவன் இருக்கும். எரிந்து சாம்பலான பிறகு அதைப் பூஜை அறையில் வைத்து இருக்க கூடாது. அது போல பூஜை அறையில் சாமிக்கு போட்ட மாலைகள், பூக்கள் போன்றவை ஓரிரு நாட்களுக்கு உயிரோட்டமாக இருக்கும். அதன் பிறகு அழுகி அல்லது காய்ந்து போய் உதிர்ந்து விடும். இப்படி காய்ந்து போய் உதிரும் வரை பூக்கள் பூஜை அறையில் வைத்து இருக்கக் கூடாது. காய்ந்து போன பூக்களை அப்புறப்படுத்திவிட்டு புது மலர்களை சாற்றி பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் சுவாமி படங்களை அருகருகே வைக்கக் கூடாது. ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் சற்று இடைவெளி இருக்க வேண்டும். அது போல அங்கு முன்னோர்கள் படத்தை வைத்திருக்கக் கூடாது. இறந்தவர்கள் படத்தை பூஜை அறையில் வைத்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. இதனை பலர் ஏற்றுக் கொண்டாலும், சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. நம்முடன் இருந்த உறவுகள் மறைந்த பின்பு கடவுளுக்கு நிகராகத் தான் நாம் பார்க்கிறோம். இருப்பினும் கடவுளுக்கு அருகில் முன்னோர்கள் படத்தை வைத்து வழிபடுவது நல்லதல்ல எனவே அவற்றை முறையான இடங்களில் வைத்து மரியாதை செய்வது நலம் தரும்.

lemon

ஸ்படிக மாலை போன்ற தெய்வீகம் சார்ந்த மாலைகள், தாயத்துகள், எந்திர தகடுகள் போன்றவற்றை சுவாமி படங்களுக்கு சாற்றி வைக்கக் கூடாது. மந்திரித்த பொருட்களை தனியாக பூஜை அறையில் வைக்க வேண்டுமே தவிர, அதனை படங்களில் போட்டு வைப்பது அவ்வளவு உசிதமானது அல்ல! மேலும் மந்திரித்து கொடுத்த எலுமிச்சை பழம் போன்றவற்றை அதன் ஆயுட் காலம் முடிவடைந்த பின்பு அப்புறப்படுத்திவிட வேண்டும். அன்னபூரணிக்கு போடப்பட்டிருக்கும் அரிசி போன்றவையும் அப்படித்தான். எல்லா பொருட்களுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. அந்த காலம் முடிவடைந்த பின்பும் அவை பூஜை அறையில் இருப்பது மிகவும் தவறு. எனவே இத்தகைய பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக பூஜைகள் செய்யும் பொழுது நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்!

- Advertisement -