தினமும் பூஜையில் வைக்கும் இந்த பொருளை தெரியாமல் கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். இதனால் பூஜை செய்த பலன் உங்களுக்கு கிடைக்காததோடு, தீராத துயரங்கள் வந்து சேரும்.

Poojai
- Advertisement -

நம் சாஸ்திரத்தில் பூஜைக்கு பயன்படுத்தும் பொருளுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. பூஜைக்கு என்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. இதன் அர்த்தம் தெரியாமல் செய்யும் சில தவறுகளால், நமக்கு பெரும் துன்பம் வருவதோடு நம்மிடம் இருக்கும் செல்வமும் நம்மை விட்டு போய் விடும். அது என்னவென்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது நாம் இந்த பதிவில் வெற்றிலையை பயன்படுத்துவதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வெற்றிலை மகாலட்சுமியின் சொரூபமாக பார்க்க படுகிறது. எந்த மங்கள நிகழ்வாகட்டும் அல்லது அமங்கலமான நிகழ்வாக கூட இருக்கட்டும் வெற்றிலை இல்லாமல் எந்த காரியமும் நடப்பது கிடையாது அனைத்திலும் முதலிடமும் இந்த வெற்றிலைக்கு மட்டும் தான்.

- Advertisement -

இந்த வெற்றிலையை நாம் தெரியாமல் கூட தனியாக எங்கும் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். வெற்றிலை கொடுக்கும் போது அதனுடன் பாக்கு, மஞ்சள், பூ இப்படி ஏதாவது ஒரு பொருளை உடன் சேர்த்து தான் கொடுக்க வேண்டும் தனியாக கொடுக்கக் கூடாது. வெற்றிலை தனியாக கொடுக்கும் போது நம்மிடம் இருந்து செல்வம் போவதுடன், நாம் யாருக்கு கொடுக்கிறோமோ எதற்கு செய்கிறோமோ, அந்த உறவுடனும் அல்லது அந்த காரியத்துடனான நம் உறவு துண்டித்து விடுவதற்கான அர்த்தம் தான் இந்த வெறும் வெற்றிலையை வைக்கும் முறை.

சுப காரியங்களை முடிவு செய்யும் போது அதை உறுதிபடுத்தும் விதமாக வெற்றிலை பாக்கு மட்டும் வைத்து உறுதி செய்கிறார்கள். எந்த ஒரு காரியத்திற்கான தொகையை நாம் கொடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது நல்ல விஷயத்திற்காக வேறு எதை கொடுப்பதாக இருந்தாலும், வெற்றிலை பாக்கு வைத்து கொடுப்பதற்கான காரணம், நாம் செய்வதற்கான புண்ணியமும். காரியமும் நல்ல படியில் தொடர வேண்டும் என்பதற்காகத் தான். திருமணம் உறுதி செய்யும் போது முதலில் வெற்றிலை பாக்கை மட்டும் மாற்றி உறுதி செய்து கொள்கிறார்கள். இதனால் அந்த உறவு வலுப்படுகிறது அது நமக்கு வேண்டும். என காலம் காலமாக அந்த உறவு நல்ல முறையில் தொடர வேண்டும் என்பதற்காக தான். அதே போல கெட்ட காரியங்களில் வெற்றிலையுடன் மங்கள் பொருட்கள் சேர்த்து தர மாட்டார்கள் காரணம் அந்த நிகழ்வு தொடர கூடாது என்பதற்காக தான்.

- Advertisement -

இதையே தான் தெய்வத்திற்கு படைக்கும் போதும் வெறும் வெற்றிலை தனியாக வைக்க கூடாது, அப்படி வைத்தால் தெய்வத்தை வணங்குவதற்கான பலன் இல்லாமல் போவதுடன் தெய்வத்துடன் தொடர்பு இல்லை என்று ஆகிவிடும். வெற்றிலை வைக்கும் போது அதன் மீது கொஞ்சம் வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கல் கண்டு, இப்படி ஏதாவது ஒன்றை கட்டாயமாக வைத்து தான் வணங்க வேண்டும். எதுவும் இல்லாமல் வெறும் வெற்றிலையை மட்டும் வைத்து வணங்கவே கூடாது வணங்குவதற்கான பலன் நமக்கு கிடைக்கவே செய்யாது.

அதனால் தான் விவரம் தெரிந்தவர்கள் வீட்டில் வளர்க்கும் வெற்றிலை கொடியை கூட தனியாக வளர்க்க மாட்டார்கள், அதனுடன் வேறுகொடி சேர்த்து தான் வளர்ப்பார்கள். இதே போல் வீட்டில் பூஜைக்கு என்று வைக்கும் வெற்றிலையை பூஜை முடிந்தவுடன் வாட விடக் கூடாது. வெற்றிலை போடும் பழக்கம் இருப்பவர்கள் யாரிடமாவது கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்கும் போது கூட இந்த வெற்றிலையை தனியாக கொடுக்கக் கூடாது, இத்துடன் ஒரு பாக்கை சேர்த்து தான் கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று இந்த விளக்கை ஏற்றுபவர்களுக்கு நிச்சயம் சொந்த வீடு வாங்குவதற்கான நேரம் காலம் கை கூடி வந்துவிடும்.

நாம் தினமும் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யும் ஒவ்வொரு காரியமும் நாம் நல்ல முறையில் வாழவும் நம் சந்ததியினர் நல்ல ஒரு வாழ்க்கையை வாழவும் தான் செய்கிறோம். நாம் தெரியாமல் செய்யும் இது போன்ற தவறுகளால் நாம் துன்பத்தை ஏற்படுத்தி கொள்ளாமல் இருப்போம்.

- Advertisement -