சமையலுக்கு பயன்படுத்தும் இந்த ஒரு பொருளை செடிகளில் சேர்த்துவிட்டால் போதும். பூக்காத செடிகலிளும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூக்கும்

rose
- Advertisement -

இப்பொழுதெல்லாம் பலரது வீட்டிலும் தோட்டம் அமைத்து பலவித செடிகளை வளர்த்து வருகிறார்கள். வீட்டில் இடம் இல்லாதவர்கள் கூட தங்களது மாடிகளில் பூச்செடிகளையும், காய்கறி செடிகளையும் வைத்து வளர்த்து வருகின்றனர். அவ்வாறு ஆசை ஆசையாக வளர்த்துவரும் பூ செடிகளில் பூக்கள் பூக்காமல் இருந்தால் மிகவும் வருத்தமாக தான் இருக்கும். நமக்குத் தெரிந்தவரையில் பலவித ஊட்டச்சத்துகள் மற்றும் உரங்களை சரியாக கொடுத்தாலும் ஒரு சில செடிகளில் பூக்கள் வளர்வதில்லை. இவ்வாறான செடிகளை என்ன செய்வது என்றே பலருக்கும் தெரியாது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு செடிகளில் பூக்கள் அதிகமாக பூக்க செய்வதற்கு இந்த ஒரு உணவுப் பொருளை பயன்படுத்தினால் போதும். வாருங்கள் அது என்ன பொருள் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

flower-garden

செடிகள் வாங்கும் இடங்களிலேயே பலவித உரங்களும் விற்கப்படும். அவ்வாறு மண்புழு உரம், புண்ணாக்கு உரம் மற்றும் பாஸ்பரஸ் உரம் இதைப்போன்று பலவித உரங்கள் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கிக் கொண்டு இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காலத்திற்கு ஏற்றார்போல் செடிகளில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு உரத்தையும் பயன்படுத்துவதற்கென்று தகுந்த வழிமுறைகள் இருக்கின்றன. அவ்வாறு இவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு உங்கள் வீட்டின் தோட்டத்தில் உள்ள செடிகள் உரங்கள் கொடுத்த பிறகும் பூக்காமல் இருந்தது என்றால் அவற்றிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தமாகும். இதனை சரி செய்வதற்கு நாம் சமையலில் குருமா வைப்பதற்கும் பொரியல் செய்வதற்கும் பயன்படுத்தும் மீல்மேக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

plant-uram

20 மீல்மேக்கர் எடுத்துக் கொண்டு அதனை இரண்டு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் மீல் மேக்கர் நன்றாக ஊறியதும் அவற்றை கையில் எடுத்து நன்றாக பிழிந்து வெளியே எடுக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரை ஒரு டம்ளர் வீதம் அனைத்து பூச்செடிகள், மற்றும் காய் செடிகளுக்கு ஊற்றவேண்டும்.

- Advertisement -

இந்த மீல்மேக்கரில் இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. எனவே மீல்மேக்கரின் சத்துக்கள் நிறைந்த இந்த தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றும் பொழுது பூக்கள் பூக்கவே பூக்காது என்று நினைத்த செடிகளிலும் பூக்கள் அதிகமாகவும், அளவில் பெரியதாகவும் பூக்கின்றன.

soya-maker

இதனை இன்னொரு முறையிலும் பயன்படுத்தலாம். இந்த மீல்மேக்கரை சிறிதளவு எடுத்து அவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் பொழுது இந்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, அதனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு பத்து நிமிடம் ஊறவைத்து, அந்த தண்ணீரையும் செடிகளுக்கு ஊற்றி விடலாம்.

meal-maker1

அதுமட்டுமல்லாமல் இந்த மீல்மேக்கரை சமைப்பதற்கு முன்னர் அதனை சுடுதண்ணீரில் ஊறவைத்து தான் பயன்படுத்துவோம். இவ்வாறு ஊற வைத்த தண்ணீரையும் நன்றாக ஆறியபின் செடிகளுக்கு ஊற்றி வரலாம். இவ்வாறு செய்வதாலும் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள பூக்காத செடிகளிலும் அதிக அளவு பூக்களை பூக்க செய்யலாம்.

- Advertisement -