ஆந்திரா ஸ்டைலில் பூண்டு பொடி அரைத்து, பொடி இட்லி செய்தால் எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா உங்களுக்கு? இதோ ஆந்திரா ஸ்டைல் பூண்டு பொடி ரெசிபி.

podi-idli
- Advertisement -

ஆந்திரா ஸ்டைலில் சமைப்பதாக இருந்தால் கொஞ்சம் காரசாரம் தூக்கலாக இருக்க வேண்டும். அதேபோல வர மல்லி சேர்க்காமல் அவர்களுடைய சமையல் இருக்காது. இன்று பூண்டு சேர்த்த இட்லி பொடி மணக்க மணக்க காரசாரமாக எப்படி அரைப்பது என்று தான் பார்க்கப் போகின்றோம். இந்த இட்லி பொடியை அரைத்து, ஒரு முறை பொடி இட்லி சாப்பிட்டு பாருங்கள். வாழ்நாளில் வேறு எதுவுமே தேவையில்லை. அத்தனை ருசியும் மனமும் நிறைந்த இந்த ரெசிபி வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க அந்த ஆந்திரா பூண்டு பொடியை எப்படி அரைப்பது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு நமக்கு 2 கைப்பிடி அளவு பூண்டு தேவை. பூண்டை தோல் உரித்து சின்ன உரலில் போட்டு, ஒன்றும் இரண்டுமகா நசுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன், நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் இடித்து வைத்திருக்கும் இந்த பூண்டை போட்டு பொன்னிறம் வரும் வரை வருக்க வேண்டும். பூண்டு சரியாக வறுபடவில்லை என்றால் போடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஜாக்கிரதையாக பூண்டை மொறுமொறுப்பாக வறுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து அதே கடாயில் உளுந்தம் பருப்பு 1/4 கப், கடலைப்பருப்பு 1/4 கப், போட்டு பொன்னிறம் வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளுங்கள். இதையும் தட்டில் கொட்டி ஆறவைத்து விடுங்கள். பிறகு அதை கடாயில் வர மல்லி 2 டேபிள் ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், போட்டு வறுக்கவும். இது வாசம் வரும் வரை வருத்த பின்பு இதையம் தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே கடாயின் துருவிய கொப்பரை தேங்காய் 1 கைப்பிடி அளவு சேர்த்து வறுக்கவும். பிறகு அதே கடாயில் வர மிளகாய் 10, போட்டு லேசாக சூடு செய்து எடுத்து விடுங்கள். பிறகு கருவேப்பிலை 2 கொத்து போட்டு மொறுமொறுப்பாக வரும் அளவுக்கு வறுத்து விடவும்.

- Advertisement -

ஒவ்வொரு பொருட்களாக வறுக்கவறுக்க எல்லா பொருட்களையும் ஒரே தட்டில் கொட்டிக் கொள்ளலாம். பூண்டை மட்டும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு தவிர, வறுபட்ட மற்ற மசாலா பொருட்களை எல்லாம் போட்டு தேவையான அளவு உப்பு, பெருங்காயம் போட்டு, இதை அரைக்க வேண்டும்.

இறுதியாக வறுத்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து இரண்டு ஓட்டு ஓட்டினால் சூப்பரான மணமணக்கும் வாசத்துடன் பூண்டு பொடி தயார். இதை ரொம்பவும் கொரகொரப்பாக அரைக்க வேண்டாம். ரொம்பவும் நைஸ் ஆகவும் அரைக்க வேண்டாம். 90% அடைபடும்படி இந்த பூண்டு பொடியை தயார் செய்யவும். அரைத்த இந்த பூண்டு பொடியை பாட்டிலில் ஸ்டோர் செய்தால் ஒரு மாதத்திற்கு மேல் கூட கெட்டுப்போகாது. சுடச்சுட சாதம் இட்லி, தோசைக்கு என்று எப்படி வேண்டும் என்றாலும் இந்த பூண்டு பொடியை நாம் பரிமாறலாம். சுவை நிறைந்த இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு இருந்தா போதும் 10 நிமிடத்தில் சூப்பரான டிக்கி இப்படி செஞ்சு பாருங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

இதற்கு தேவையான பொருட்களை இறுதியாக ஒரு முறை மொத்தமாக பார்த்து விடுவோம். தோல் உரித்த பூண்டு 2 கைப்பிடி, உளுந்து 1/4 கப், கடலைப்பருப்பு 1/4 கப், வரமல்லி 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், துருவிய கொப்பரை தேங்காய் 1 கைப்பிடி, வரமிளகாய் 10, கருவேப்பிலை 2 கொத்து, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் கால் ஸ்பூன்.

- Advertisement -