வீட்டில் விசேஷ நாட்களில் இட்லிக்கு செலவு கம்மியா அதே சமயம் டேஸ்டா சட்னி அரைக்கணும் நினைச்சா இந்த சட்னி அரைங்க எவ்வளவு கெஸ்ட் வந்தாலும் அசால்டா சமாளிக்கலாம்.

chutney
- Advertisement -

பொதுவாக இட்லிக்கு சட்னி சாம்பார் என இரண்டில் ஏதாவது ஒன்றை தான் ஸ்டைலிஷ் ஆக செய்வோம். இது சாதாரணமாக வீட்டில் உள்ளவர்களுக்கு செய்யும் போது கொஞ்சமாக செய்து சமாளிக்கலாம். ஆனால் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் நாம் செய்யும் சாம்பார் சட்னியின் அளவு இட்லியை விட அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் சமாளிக்க முடியும். அது போன்ற சமயங்களை சமாளிப்பதற்கான ஒரு அருமையான சட்னி ரெசிபியை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

பொட்டுக் கடலை – 1/4 கப், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 4 பல், மீடியம் சைஸ் வெங்காயம் – 3,கருவேப்பிலை – 1 கொத்து, கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிய பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி அதையும் சேர்த்து உப்பையும் இப்போதே சேர்த்து வெங்காயம் லேசாக கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விடுங்கள்.

அடுத்து வதக்கிய வெங்காயம் நன்றாக ஆறிய பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இத்துடன் பொட்டுக்கடலையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னியை ரொம்ப மைய அரைக்க கூடாது. லேசான கொரகொரப்பு தன்மையுடன் இருந்தால் தான் சட்னி நன்றாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து அரைத்த இந்த சட்னியை ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த சட்னி இப்போது நல்ல கெட்டியாக பேஸ்ட் பதத்தில் இருக்கும். இதற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம். இந்த சட்னியும் தண்ணியாக இருந்தால் தான் சாப்பிடவே நன்றாக இருக்கும். இப்போது அடுப்பில் தாளிப்பு கரண்டியில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்தவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து அதை சட்னியில் ஊற்றி பரிமாறுங்கள்.

இதையும் படிக்கலாமே: இட்லிக்கு தொட்டு சாப்பிட வழக்கமா செய்யும் சட்னி சாம்பாருக்கு ஒரு நாள் லீவு விட்டு, பீர்க்கங்காயில் இப்படி ஒரு சைடு டிஷ் செய்து வையுங்கள். 2 இட்லி சாப்பிடுறவங்க கூட, 4 இட்லி சாப்பிடுவாங்க.

இந்த சட்னி செய்ய தேவையான பொருள்களும் நேரமும் மிகவும் குறைவு. இனி வீட்டுக்கு விருந்தினர் வரும் போது இட்லிக்கு இந்த சட்னியை செய்து விடுங்கள. ருசியும் பிரமாதமாக இருக்கும் அதே நேரத்தில் எவ்வளவு தாராளமாக கரைத்தாலும் சட்னியின் ருசி மாறாது. இதில் சேர்த்து இருக்கும் பொருளின் அளவை மட்டும் நீங்கள் எத்தனை பேருக்கு சமைப்பீர்கள் என்பதை பொறுத்து மாற்றிக் கொள்ளுங்கள். சுவையான இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு பிடித்து இருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -