பூரம் நட்சித்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்

narasimma

இறை நிலை அல்லது ஞானம் என்கிற உயரிய நோக்கம் கொண்டு வாழ்ந்து வருபவர்களுக்கு சில சித்திகள் கூடிய விரைவில் கைவரப் பெறும். ஆனால் அவற்றை எல்லாம் விடுத்து இறைவனுடன் ஒன்று கலந்து பேரானந்தம் அடைகின்ற நிலையை மட்டுமே நோக்கமாக கொள்பவர்கள், மீண்டும் பிறவாத முக்தி நிலையை அடையலாம். தன் பக்தர்களுக்கு தன்னுடன் இரண்டற கலக்கும் அத்தகைய பெரும் பேறு அருளும் தெய்வமாக மகாவிஷ்ணு இருக்கிறார். அந்த மகாவிஷ்ணுவை தனது கணவராக வரித்து, அவருடன் இரண்டறக் கலந்த பெண் ஆழ்வார் தான் திருவில்லிபுத்தூரில் தோன்றிய “கோதை” எனப்படும் “ஆண்டாள் தேவி”. அந்த ஆண்டாள் தேவி பிறந்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகுதியான அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sukran

27 நட்சத்திர வரிசைகளில் பதினோறாவது நட்சத்திரமாக “பூரம்” நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். பூரம் நட்சத்திரத்தின் அதி தேவதை ஆண்டாள் தேவி ஆவார். இந்த பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் அதிகம் பொருளீட்டவும், அதிர்ஷ்டங்கள் யோகங்களை பெறவும் அனுபவிக்கவும் கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

ஆண்டவர் தேவி பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற பூரம் நட்சத்திர தினத்தில் இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவில்லிபுத்தூரில் இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சென்று, அங்கு அருள் புரியும் ரெங்கமன்னார் மற்றும் ஆண்டாள் தேவியை வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் முடிந்த போது சிவன் கோயில்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்பட வழிவகை செய்யும். சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி, வழிபாடு செய்வதும் நன்மை பயக்கும் ஒரு பரிகாரமாக இருக்கிறது.

பூரம் நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக பலா மரம் இருக்கிறது. எனவே பலா மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று பலா மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகம் ஏற்பட செய்யும். மேலும் கோயில்களுக்கு பலாபழங்களை தானமாக வழங்குவதும் உங்களுக்கு சிறப்பான யோகங்களை ஏற்படுத்தச் செய்யும். உங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பறவைகள், அணில், பூனை, நாய் போன்ற ஜீவராசிகளுக்கு தினந்தோறும் உணவிடுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் உங்களின் கர்ம வினைகளும், தோஷங்களும் நீங்கி மேன்மையான பலன்கள் ஏற்படுவதை அனுபவ ரீதியாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pooram nakshatra dosha pariharam in Tamil. It is also called Pooram natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Sukra bhagavan natchathirangal in Tamil or Sukkiran natchathirangal in Tamil.