உங்கள் வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் போக்கி நற்பலன் தரும் பரிகாரங்கள்

cow
- Advertisement -

நம்மில் பலர் நம்முடைய வாழ்க்கையில் தான் வெளியில் கூற முடியாத பல கஷ்டங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் வெளியில் சொல்ல முடியாத துயரங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இத்தகைய சூழலில் எந்த ஒரு மனிதருக்கும் மிகச்சிறந்த ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் இருப்பது தெய்வ வழிபாடு தான். இறைவழிபாடு மூலம் நமது மனத்துயரை நீக்குவதோடு, நம் வாழ்வில் ஏற்படும் எத்தகைய கஷ்டங்களையும், பிரச்சனைகளை போக்குவதற்கு ஆன்மீக ரீதியான சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

parigaaram-10

சித்தர்களும், முனிவர்களும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கேற்ற வகையில் தாந்த்ரிக முறையில் பரிகார முறைகளை கூறியிருக்கின்றனர். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல், விரதம் அனுஷ்டித்தல், பரிகார பூஜைகள் என பல வகையான பரிகார முறைகள் இருந்தாலும் அனைவராலும் மிகச் சிறந்த பரிகாரமாக ஏற்றுக் கொள்ளப்படுவது பிறருக்கு தானம் செய்யும் பரிகாரம் தான்.

- Advertisement -

தானம் என்பது எந்த ஒரு விடயத்தையும் அவற்றைப் பெற முடியாத சூழலில் தவிக்கும் வசதி குறைவான நபர்களுக்கு நாம் மனமுவந்து தருவதேயாகும். தானம் அளிப்பதால் நமது முன் ஜென்ம கர்ம வினைகள் போன்றவை விரைவில் நீங்கி, நமக்கும் நமது பிற்கால சந்ததியினருக்கும் மிகப்பெரும் புண்ணிய பலன்களை கொடுக்கிறது. தானங்களில் பல வகைகள் உண்டு. எனினும் தற்காலத்தில் பெரும்பாலான மக்களுக்கு வாழ்வில் ஏற்படும் எத்தகைய கஷ்டங்களையும் விரைவில் போக்குவதற்குரிய ஒரு சிறந்த தான பரிகாரமாக இருப்பது கோ தானம் எனப்படும் பசு மாடு தானம் ஆகும்.

gomatha-poojai

தானங்களில் மிகவும் உத்தமமான பலன்களை தருவதும், அனைத்து பாபங்களை போக்கி நற்பலன்களை அளிப்பது கோ தானம் எனப்படும் பசுவை தானம் செய்வதாகும். ஆனால் எல்லோராலும் இந்த கோதானம் செய்ய இயலாது. அப்படிப்பட்டவர்கள் ஒரு தாம்பாளத் தட்டில் மட்டைத் தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், வேஷ்டி துண்டு, உங்களால் முடிந்த தட்சிணை தொகை போன்றவற்றை வைத்து, வேதம் அறிந்த பிராமணர் அல்லது அந்த தானத்தை பெறக்கூடிய தகுதி வாய்ந்த நபர் என நீங்கள் நினைக்கும் நபருக்கு வளர்பிறை காலத்தில், சுப நேரத்தில் தானம் வழங்குவது சிறந்த ஒரு பரிகாரமாகும்.

- Advertisement -

homam

மேலும் திருக்கோவில்களில் நடைபெறும் ஹோம பூஜைகளுக்கு உங்களால் முடிந்தளவு சுத்தமான பசு நெய் தானம் அளிப்பது மிகவும் சிறந்த நன்மையை உங்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தானமாகும். மேற்கண்ட இரு தானங்களை செய்பவர்களுக்கு காரியத் தடை தாமதங்கள் நீங்கி, அனைத்திலும் வெற்றி உண்டாகும். குல சாபங்கள் நீங்கும், புத்திர பாக்கியத் தடை நீங்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்கள் மற்றும் குடும்ப பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட தொடங்கும். செல்வ சேர்க்கை அதிகாரிக்கும். வீடு, வாகனம் போன்ற வசதிகள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
ரஜ்ஜு தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dhana pariharam in Tamil. It is also called as Go dhanam in Tamil or Kadan nivarthi pariharam in Tamil or Kastangal theera valigal in Tamil or Aanmeega pariharangal in Tamil.

- Advertisement -