பூரம் நட்சத்திரக்காரர்கள் செல்வம், சுக போகங்கள் பெற இவற்றை செய்ய வேண்டும்.

sukkiran

கவலைகள் ஏதும் இல்லாத வாழ்க்கை ஒருவர் வாழ வேண்டும் என்றால் அவரது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார வரவிற்கு குறைவு ஏதும் இருக்க கூடாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு மனிதனுக்கு மிகுந்த பொருள் வளத்தையும், சுக போகங்கள் பல அனுபவிக்கும் பாக்கியத்தை தருபவர் சுக்கிர பகவான் ஆவார். அந்த சுக்கிரன் பகவானுக்குரிய ஒரு நட்சத்திரம் தான் “பூரம் நட்சத்திரம்”. இந்த பூரம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுந்த செல்வத்தையும் சுகங்களையும் அனுபவிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

sukran

27 நட்சத்திர வரிசைகளில் 11 நட்சத்திரமாக “பூரம்” நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிர பகவானின் அதிகத்திற்குரிய இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் பிறரை கவர்ந்திழுக்கும் முகத்தோற்றமும், உடலமைப்பையும் பெற்றிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதிலும் சுகம் அனுபவிப்பதிலும் மிகவும் விருப்பம் உடையவர்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் அதிகம் பொருளீட்டவும், சுக போகங்கள் அனுபவிக்கவும் கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

பூரம் நட்சத்திரக்காரர்கள் வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சுக்கிரன் பகவானுக்கு மல்லிபூக்கள் சாற்றி, இனிப்பு நைவேத்தியம் வைத்து சுக்கிர பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இதே வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி பிராத்திக்க வேண்டும். வருடம் ஒருமுறை கஞ்சனூர் சுக்கிரன் பகவான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

feeding birds

வெள்ளிக்கிழமைகளில் இளம் பச்சை நிற ஆடைகள் அணிவது உங்களுக்கு பொருள் விவகாரங்களில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பசு, நாய், பூனை, பறவைகள் ஆகிய உயிரினங்களுக்கு அவ்வப்போது உணவு வழங்குவது உங்களுக்கு ஏற்படும் எத்தகைய தோஷங்களையும் போக்கும். பொருளாதார வசதி குறைவான பெண்களுக்கு பொட்டு,வளையல், ஆடைகள் போன்றவற்றை தானம் தருவது உங்களுக்கு மகாலட்சுமி தேவியின் அருட்கடாட்சம் பெற செய்யும்.

இதையும் படிக்கலாமே:
16 சோமவார விரதம் முறை மற்றும் பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pooram natchathiram pariharam in Tamil. It is also called as Pooram nakshatra in Tamil or Pooram natchathiram valipadu in Tamil or Pooram nakshatra adhipathi in Tamil or Pooram natchathira kovil.