பூர்வ புண்ணிய தோஷ பரிகாரம்

Poorva punya dosha pariharam in Tamil
- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது அவரது லக்னத்தில் இருந்து எண்ணினால் வருகின்ற 5 ஆம் வீடாகும். இந்த 5 ஆம் வீடு என்பது ஒரு ஜாதகரின் முன்னோர்கள் செய்த பூர்வ புண்ணியங்கள் குழந்தை பேறு போன்றவற்றை குறிக்கக்கூடிய இடமாக உள்ளது. இந்த ஐந்தாம் இடத்தில் ராகு – கேது ஆகிய கிரகங்கள் இருந்தால், அந்த ஜாதகருக்கு பூர்வ புண்ணிய தோஷம் ஏற்பட்டிருப்பதாக ஜோதிடர்கள் கணக்கிடுகின்றனர். அந்த வகையில் பூர்வ புண்ணிய தோஷம் ஏற்பட்டு அதனால் வாழ்வில் பல சிக்கல்களை சந்திப்பவர்கள் செய்ய வேண்டிய பூர்வ புண்ணிய தோஷ பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பூர்வ புண்ணிய தோஷம் விலக பரிகாரம்

பூர்வ புண்ணியம் என்றாலே அது நம்மையும், நமது முன்னோரையும் குறிப்பதாக பொருள். நமது முன்னோர்கள் செய்த நன்மை, தீமைகள் நம் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மறைந்த நம் முன்னோர்களின் ஆன்மா அமைதி பெற்று, நம்மை ஆசீர்வதிக்க காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு ஒரே சமயத்திலோ அல்லது மேற்சொன்ன ஒவ்வொரு தலங்களுக்கும் வேறுவேறு சமயத்தில் சென்று பித்ரு தர்ப்பணம் மற்றும் பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். குறிப்பாக தை அமாவாசை மற்றும் மகாலய அமாவாசை அன்று மேற்சொன்ன புனித தலங்களில் மறைந்த முன்னோர்களுக்கு தேதி மற்றும் தர்ப்பணம் அளிப்பதால் நமது பூர்வ புண்ணிய தோஷங்கள் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

பூர்வ புண்ணிய தோஷம் நீங்க தொலைதூர தளங்களுக்கு சென்று பரிகாரம் செய்ய முடியாதவர்கள் தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்ற வழிபாடு செய்யலாம். அமாவாசை தினங்களில் உங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு முன்பாக 7 மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, பஞ்சதிரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தை, ஆடி, மாகாலய அமாவாசை தினங்களில் மறைந்த முன்னோர்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் அளிப்பது போன்ற சடங்குகளை முறையாக செய்வதும் உங்களின் பூர்வ புண்ணிய தோஷங்களை போக்கும்.

தினந்தோறும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய பகவான் உதிக்கின்ற நேரத்தில் சூரிய தரிசனம் செய்து வருபவர்களுக்கு பூர்வ புண்ணிய தோஷங்களால் வாழ்வில் பாதிப்புகள் ஏற்படாது. அதேபோன்று பௌர்ணமி தினங்களில் வானில் முழுமையாக தோன்றியிருக்கும் சந்திர பகவானே தரிசித்து வழிபாடு செய்பவர்களுக்கும் பூர்வ புண்ணிய தோஷங்களால் பாதிப்புகள் உண்டாகாது.

- Advertisement -

பௌர்ணமி தினங்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் – உண்ணாமலை அம்மன் திருக்கோவிலுக்கு சென்று சிவபெருமானையும் அம்பாளையும் தரிசனம் செய்த பிறகு, சிவபெருமானே மலையாக வீற்றிருக்கின்ற அண்ணாமலை மலையை சுற்றி கிரிவலம் வந்து, அங்கிருக்கின்ற 9 துறவிகளுக்கு அன்னதானம் அளித்து, வஸ்திரதானம் செய்வதாலும் பூர்வ புண்ணிய தோஷங்கள் நீங்கி வாழ்வில் வாழ்வில் நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: கிரகண பரிகாரம்

வறிய நிலையில் இருக்கின்ற அந்தணர்களுக்கு அமாவாசை தினங்களில் அரிசி பருப்பு காய்கறிகள் மற்றும் வஸ்திரம் எனப்படும் புத்தாடைகளை தானம் கொடுப்பது நல்லது. மேலும் பொருளாதார வசதி உள்ளவர்கள் ஒரு அந்தணருக்கு கன்றுடன் கூறிய நாட்டு பசுமாடை தானம் இருப்பதால் பூர்வ புண்ணிய தோஷம் முற்றிலும் நீங்கும் எனவும் ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -