திருஷ்டி பூசணிக்காயை உடைக்கும் சரியான முறை

poosanikai
- Advertisement -

பொதுவாகவே திருஷ்டி கழிப்பதில் இந்த பூசணிக்காய்க்கு முன்னுரிமை உண்டு. இதை சைவ பலி என்று சொல்லுவார்கள். இந்த பூசணிக்காயை திருஷ்டி கழித்தால், கெட்ட நேரம் நம்மை விட்டு ஓடோடி போகும். பூசணிக்காயில் திருஷ்டி கழிக்க கூடிய ஒரு புது முறையை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஆன்மீகம் சார்ந்த இந்த தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி ஒருமுறை திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களைப் பிடித்த துரதிஷ்டம் விட்டு விலகும். வெற்றிகள் வந்து குவியம் கண் திருஷ்டி நீங்கும்.

பூசணிக்காயில் திருஷ்டி சுற்றும் முறை

கூடுமானவரை பூசணிக்காயை வாங்கி முழுசாக சுற்றுவது தான் நல்லது. சில பேர் அதை கத்தியால் வெட்டி எடுத்து அதன் உள்ளே சிவப்பு நிற குங்குமத்தை போட்டு, சில நாணயங்களை போட்டு அதற்குப் பிறகு திருஷ்டி சுற்றி உடைப்பார்கள். ஆனால் அது தவறு. பூசணிக்காயை அறுத்துவிட்டால் அதனுடைய உயிர் முன்னாடியே போய்விட்டது என்று அர்த்தம்.

- Advertisement -

பிறகு அந்த பூசணிக்காயை சுற்றி உடைப்பதில் எந்த ஒரு பலனும் நமக்கு முழுசாக கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே வாங்கிய பூசணிக்காயை கழுவி விட்டு தரையில் வைத்து விடுங்கள். பிறகு அந்த பூசணிக்காயை நான்கு முறை தாண்ட வேண்டும். நான்கு திசைகளில் இருந்தும் தாண்ட வேண்டும்.

முன்பக்கமாகத்தான் காலை வைத்து தாண்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலை முன்னாடி வைத்து தாண்டி விட்டு, இன்னொரு காலை பூசணிக்காய்க்கு பின்பக்கமாக வைத்து தாண்டாதீங்க. அது தவறு. வலது கால் முன்னிருந்துதான் எடுத்து வைத்து தாண்ட வேண்டும்.

- Advertisement -

4 திசைகளிலும் நான்கு முறை பூசணிக்காயை தாண்டி விட்டு அதன் பிறகு முழு பூசணிக்காயை சுற்றி வீட்டிற்கோ அல்லது கடைக்கு திருஷ்டி கழித்தால் முழு பலனும் கிடைக்கும். கண் திருஷ்டி கெட்ட சக்தி எல்லாம் உங்களை விட்டு ஓடோடி விடும். இதே போல அமாவாசை தினங்களில் திஷ்டி கழித்துக் கொள்ளலாம். இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி இந்த நாட்களிலும் மேல் சொன்ன முறைப்படி பூசணிக்காய் சுற்றி உடைத்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: சக்கரத்தாழ்வாரை இப்படி கும்பிட்டால் கடனே வராது.

நிச்சயமாக உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டியில் இருந்து விடுபட்டு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -