உளுந்து சேர்க்காமல் பஞ்சு போல சாஃப்ட் இட்லி செய்வது எப்படி

soft idli batter
- Advertisement -

நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் டிபன் வகைகளில் எப்போதுமே இட்லிக்கு தான் முதலிடம். ஏனெனில் இது ருசிக்கு மட்டுமில்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஒரு ரெசிபியை இது வரை இல்லாத புதிய முறையில் எப்படி செய்வது என்று தான் இப்பொழுது நாம் தெரிந்து நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த இட்லியை நாம் அரைக்கும் முறை என்று பார்த்தால் அரிசி உளுந்து என இரண்டையும் சேர்த்து செய்வது தான். ஆனால் உளுந்தே சேர்க்காமல் கூட இட்லியை சாப்டாக செய்ய முடியலாம் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கலாம். அது எந்த பொருள் எப்படி அரைக்க வேண்டும் என்பதை எல்லாம் இப்பொழுது நாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தேவையான பொருள்கள்

இட்லி அரிசி – 2 கப்,
வெள்ளை அவல் – 1 கப்,
வெந்தயம் – 2 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்

செய்முறை

இந்த இட்லி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியும் வெந்தயத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை அப்படியே ஊற விடுங்கள்.

- Advertisement -

இன்னொரு பௌலில் வெள்ளை அவலை எடுத்து ஒரு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கீழே ஊற்றி விடுங்கள். அதன் பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி இதை ஒரு மணி நேரம் மட்டும் ஊற விட்டால் போதும் அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம். ஆகையால் அரிசியை ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து அவலை ஊற வைத்தால் போதும்.

நான்கு மணி நேரம் கழித்து அரிசியில் இருக்கும் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு, இதை ஒரு மிக்ஸி ஜாரில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவலில் இருக்கும் தண்ணீரை தனியாக வடித்து விட்டு அவலை மட்டும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவல் ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்ற வேண்டாம்.

- Advertisement -

இப்போது இந்த அரிசியை இட்லி மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். அரைக்கும் போது இடையிடையே அவல் ஊற வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு போட்டு கலந்து எட்டு மணி நேரம் வரை அப்படியே புளிக்க வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்திக்கு கிரேவி செய்ய போறீங்களா? முட்டைகோஸ் கிரேவி செய்முறை

எட்டு மணி நேரம் கழித்து மாவை ஒரு முறை நன்றாக கலந்த பிறகு எப்பொழுதும் போல இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் நல்ல பஞ்சு போல சாப்டான இட்லி தயார். இதற்கு சட்னி சாம்பார் என எந்த ஒரு சைடிஷ் ஆக இருந்தாலும் அட்டகாசமாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு முறை மாவதற்கு இட்லி ஊற்றி பாருங்கள் ரொம்பவே சூப்பராக இருக்கும்.

- Advertisement -