அஞ்சே நிமிஷத்துல அரிசி உளுந்து எதுவுமே இல்லாம நல்லா மொறு மொறுன்னு தோசையும், இதுக்கு சைடிஷா நல்ல ருசியா மதுரை காரச் சட்னியும் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

டிபன் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது இட்லி தோசை தான். மற்ற உணவு வகைகள் கூட இதற்கு அடுத்த படியாகத் தான் யோசிப்போம். இதனாலே பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இட்லி மாவு எப்போதும் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் வீட்டில் மாவு இல்லாத சமயத்தில் கூட அரிசி, உளுந்து எதையும் சேர்க்காமல் நல்ல மொறு மொறுவென்று தோசையும் அதற்கு சைடு டிஷ் ஆக காரசாரமாக ஒரு சட்னியும் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அரிசி உளுந்து சேர்க்காத மொறு மொறு தோசை செய்முறை:
இந்த தோசை செய்வதற்கு முதலில் இரண்டு கப் பொரி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் தயிர், கால் டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் வெல்லம் ( வெல்லம் சேர்க்கும் போது தோசை நல்லா சிவந்து வரும்) இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து முதலில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இவை ஓரளவுக்கு அரை பட்டவுடன் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு இதை அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கல் வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாதிரி எடுத்து நல்ல மெலிதாக இந்த தோசையை பார்த்து அதன் மேல் நல்லெண்ணெய் தேய்த்து தோசை சிவந்ததும் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள் நல்ல சுவையான மொறு மொறு தோசை தயார்.

இப்போது இந்த தோசைக்கு நல்ல ஒரு காரசாரமான மதுரை காரச் சட்னி எப்படி செய்வது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மதுரை காரச் சட்னி செய்முறை விளக்கம்:
இந்த சட்னி அரைக்க பத்து பல் பூண்டு, ஏழு காய்ந்த மிளகாய், ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி, ஒரு டீஸ்பூன் வெல்லம், கால் டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்தவுடன், ஒரு டீஸ்பூன் உளுந்து சேர்த்து சிவந்தும் அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து எண்ணெய் நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போதே எடுத்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றி ஒரு முறை கலந்து விடுங்கள். நல்ல சுவையான காரசாரமான சட்னியும் தயார்.

இதையும் படிக்கலாமே: வீட்ல அப்பளம் இருக்கா, அப்ப உடனே ரொம்ப டேஸ்டான இந்த சமோசா செஞ்சு உங்க குட்டீஸ்க்கு கொடுங்க. சமோசாவை இதை விட சுலபமா செய்யவே முடியாது.

அதிக பட்சம் ஐந்தே நிமிடத்தில் இந்த தோசையும் சட்னியும் செய்து விடலாம். ரொம்பவே அட்டகாசமான சுவையில் இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -