பொருள் புரியாமல் மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரிக்கும் பொழுது நமக்கு முழு பலன் கிடைக்குமா? கிடைக்காதா?

Manthiram
- Advertisement -

மொழி தெரியாத பலரும் மந்திரங்களை மட்டும் எந்த மொழியாக இருந்தாலும் அதனை உச்சரித்து இறைவனை அடைவதற்கு வழி தேடுகிறார்கள். பெரும்பாலான சமஸ்கிருத மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அதில் வரும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு படித்தாலும் அதன் பொருள் என்னவோ நமக்கு சுத்தமாக புரிவதில்லை. பொருள் புரியாமல் சொல்லும் மந்திரங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பொருள் புரியாமல் சொன்னாலும் மந்திரத்தின் வார்த்தைகளை சரியாக நாம் உச்சரிக்கும் பொழுது அதன் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது என்கிறார்கள் ஆன்மீக சான்றோர்கள். கோவிலுக்குள் சென்றதும் இறைவனை பார்த்த அந்தப் பரவசத்தில் நமக்கு தெரிந்த மந்திரங்களை எல்லாம் மனதிற்குள் உளறிக் கொண்டிருப்போம்.

- Advertisement -

இப்படி உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு என்ன பொருள்? என்று நமக்கு தெரியாவிட்டாலும், அந்த வார்த்தையை சரியாக உச்சரித்து வைத்தால் முழு பலனும் கிடைத்து விடுமாம். எந்தவொரு மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் பொருள் புரிந்து உச்சரிப்பது கூடுதல் பலன் கொடுக்கும். எல்லா மொழியிலும் மந்திரங்கள் உள்ளன. எனவே உங்களுக்கு தெரிந்த மொழியில் இருக்கும் மந்திரங்களை உச்சரித்தாலே போதுமானது.

பக்கம் பக்கமாக என்ன அர்த்தம் என்று புரியாமல் பல காலங்களாக மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுக்கு கூட எளிதாக இருக்கும் தம்மொழி மந்திரங்களை பார்த்தால் அலட்சியமாக இருக்கும். எந்த மொழியில் இருக்கும் மந்திரமாக இருந்தாலும், அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால் பலனும் நிச்சயம் உண்டு.

- Advertisement -

கடவுளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பை அதிகரிக்கும் இந்த மந்திரங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வலைகளை எழுப்பும் ஆற்றல் உள்ளது. ‘ஓம்’ எனும் இந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது நம் அடி வயிற்றில் இருந்து சில அதிர்வலைகள் எழுவதை நம்மால் உணர முடிகிறது. அடிவயிற்றிலிருந்து உச்சந்தலை வரை எதிரொலிக்கும் இந்த ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் ஓசோன் வரை கேட்டுக் கொண்டிருப்பதாக கற்றறிந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.

மந்திரங்களுக்கும், ஸ்லோகங்களுக்கும் இவ்வளவு சக்திகள் இருக்கின்ற பொழுது பலரும் இதனை வாய் திறந்து சத்தமாக உச்சரிப்பதில் இன்றும் தயக்கம் காட்டுகின்றனர். இறைவனை அடைவதற்கு மந்திர உச்சாடனம் செய்வது மிகவும் முக்கியம் எனவே எந்த ஒரு வழிபாடுகளை நீங்கள் செய்வதாக இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த மற்றும் பொருள் உணர்ந்த எளிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுங்கள். பழக பழக எந்த ஒரு மந்திரத்தையும் நம்மால் எளிதாக மனனம் செய்து விட முடியும் எனவே தவறாக உச்சரித்தாலும் தொடர்ந்து உச்சரிக்க பழகிக் கொண்டே இருந்தால் நாளடைவில் உங்கள் நாவானது சரியாக வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்துவிடும்.

சிலருக்கு பிறவியாகவே வார்த்தைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் இருக்கும். இவர்கள் தவறான வார்த்தைகளை உச்சரித்தாலும், நிச்சயம் அவர்களுக்கு பலனுண்டு! மௌனமாக இறைவனை நாம் கூப்பிட்டாலும், கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்பவர் தான் கடவுள். எனவே எந்த ஒரு வழிபாட்டையும் முழு பக்தியுடனும், ஈடுபாட்டுடனும் செய்வது மிகவும் முக்கியம். கடமைக்கு என்று வழிபடாமல், கடமைக்கு என்று மந்திரத்தை சொல்லாமல் இறைவனுடன் கலந்துரையாட வேண்டும் என்கிற பக்தி சிரத்தையுடன் வழிபட்டு உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சில மந்திரத்தை உச்சரித்து பாருங்கள் தெய்வத்தை உணரலாம்.

- Advertisement -