இப்படி ஒரு மசாலா பொடி போட்டு, இதுவரைக்கும் ஒரு உருளைக்கிழங்கு ஃப்ரை சமைச்சு இருக்கவும் மாட்டீங்க, சாப்பிட்டிருக்கவும் மாட்டீங்க.

potato
- Advertisement -

உருளைக்கிழங்கு வறுவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. முற்றிலும் புதுவிதமான ஒரு உருளைக்கிழங்கு மசாலா ஃப்ரை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதுவரை நீங்கள் சுவைக்காத ருசியில் ஒரு ரெசிபி இது. உடலுக்கு மிகமிக ஆரோக்கியம் தரக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வது. உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. வாங்க பதிவிற்குள் செல்வோம்.

முதலில் 4 மீடியம் சைசில் இருக்கும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய சிறிய துண்டுகளாகக் க்யூப் வடிவில் வெட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இந்த உருளைக்கிழங்கு வறுவலில் சேர்க்க ஒரு ஸ்பெஷல் மசாலா அரைக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை போட்டு மொறு மொறுவென்று வறுத்து அப்படியே ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பு அதே கடாயில் வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/4, வரமிளகாய் – 4, இந்த பொருட்களை போட்டு வாசம் வரும் வரை வறுத்து இதயும் கறிவேப்பிலையோடு கொட்டி நன்றாக ஆற வைத்து விடவேண்டும். இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் இந்த வறுவலுக்கு ருசி கொடுக்கக்கூடிய ஸ்பெஷல் பொடி.

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துகொண்டு அதில் 2 – ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பூண்டு – 6 பல், இந்த பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய ஒரு தக்காளிப் பழத்தை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இந்த எண்ணெயில் கொட்டி மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு 2 நிமிடம் போல எண்ணெயில் இந்த உருளைக்கிழங்கை வதக்கி விட வேண்டும். மசாலா பொடியை கடாயில் இருக்கும் உருளைக்கிழங்குடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, நன்றாக கலந்து விடுங்கள்.

ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் வரை இந்த மசாலாப் பொருட்களும் உருளைக்கிழங்கும் சேர்ந்து எண்ணெயில் மொறு மொறுவென ஃபிரை ஆகட்டும். சமைக்கும்போதே இதோட வாசம் உங்களை சாப்பிடத் தூண்டும். அட்டகாசமான இந்த உருளைக்கிழங்கு ஃப்ரையை ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், எதற்கு வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ளலாம். வெரைட்டி சாதத்தோடு தொட்டுக்கொள்ள இன்னும் அருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. மிஸ் பண்ணாதீங்க. உடனே ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -