பௌர்ணமி அன்று இந்த ஒரு நல்ல விஷயத்தை செய்தால் போதும். அந்த அம்பாள் உங்கள் பரம்பரையை செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழ வைப்பாள்.

pournami-durga
- Advertisement -

இந்த பிரபஞ்சத்தில் இறை சக்தியானது நிரம்பி இருக்கக்கூடிய ஒரு நாள் தான் இந்த பௌர்ணமி திதி. பௌர்ணமி திதி என்பது அம்மனை வழிபாடு செய்வதற்கு மிக மிக உகந்த நாள் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். பௌர்ணமி அன்று உதயமாகும் சந்திர பகவானை மனதார தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் நாம் வேண்டிய வரங்கள் உடனே கிடைக்கும். உங்கள் குலதெய்வம் ஏதாவது ஒரு அம்மனாக இருந்தால் அந்த அம்மனை பௌர்ணமி திதி அன்று வழிபாடு செய்வது மிக மிக நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரு முறை இந்த இடத்தில் நினைவு கூற வேண்டியது அவசியமல்லவா. சரி, இது தவிர பௌர்ணமி தினத்தன்று நாம் வேறு எந்த விஷயங்களை செய்யலாம். வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் பௌர்ணமி தினத்தன்று அவரவர் வீட்டின் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.

- Advertisement -

அம்மன் கோவில்களில் நடக்கக்கூடிய பூஜைகளில் கலந்துகொண்டு, அம்பாளைத் தரிசனம் செய்வது குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். திருமணத்தடை, குழந்தைப்பேறு இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், அம்பாளை பவுர்ணமி தினத்தில் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகளுக்கான நல்லதொரு விடிவு காலம் சீக்கிரத்தில் பிறக்கும்.

குறிப்பாக பவுர்ணமி அன்று அம்மன் கோவில்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைப்பது சிறப்பு. மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து வேண்டினால் சுபகாரியத் தடை நீங்கும். ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டினருகில் அம்மன் கோவில் உள்ளது. ஏதோ ஒரு அம்மன் கோவில் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கோவிலில் பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு செய்யக்கூடிய சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடக்க வில்லை. என்ன செய்வது. இப்படி பௌர்ணமி அன்று பூஜை செய்யாத அந்த அம்மன் கோவிலில் பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு அபிஷேகங்கள் செய்வதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும்.

உங்களுடைய முயற்சியால் பௌர்ணமி பூஜை நடக்காத அம்மன் கோவிலில், பௌர்ணமி பூஜை நடக்கத் தொடங்கினால் உங்களுடைய பரம்பரையே செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழும் என்பது நம்பிக்கை. ஒருவரால் மட்டும் செலவு செய்து மாதம் மாதம் பெரிய அளவில் பூஜை செய்ய முடியாது, என்றால் உங்களோடு இன்னும் ஒரு சில பக்தர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை பார்த்து நிச்சயமாக அந்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய பக்தர்கள் முன்வருவார்கள்.

எடுத்து செய்வதற்கு ஆளில்லாமல் இருந்திருக்கலாம். அந்த வேலையை நீங்கள் தொடங்கி வையுங்கள். நிச்சயமாக உங்கள் முயற்சி வெற்றியடைய அந்த அம்பாள் துணை நிற்பாள். இன்று பௌர்ணமி திதி. இன்றைய நாளில் இந்த ஒரு தகவலை நமக்கு தெரியப்படுத்திய அந்த அம்மனுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -