வாழ்க்கையில் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறதா? அதை சமாளிக்க முடியாமல் திணறுபவர்கள் குலதெய்வத்திற்கு இளநீரை இப்படி வைத்து வழிபட்டு பாருங்கள். குலதெய்வத்தின் அருளால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

kula dheivam
- Advertisement -

எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் ஒருவர் கூப்பிட்டவுடன் ஓடோடி வரக்கூடிய முதல் தெய்வமாக திகழக் கூடியவர்கள் தான் குலதெய்வம். அதனால்தான் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் நம்முடைய நியாயமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்ற கருத்து நிலவுகிறது. அதே சமயத்தில் குலதெய்வத்தின் அருள் நமக்கு இல்லாத பட்சத்தில் நம்முடைய பிரச்சனைகள் மேலும் அதிகரித்து நிம்மதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெறுவதற்கு இளநீரை வைத்து எப்படி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பது நம் முன்னோர்கள் வகுத்து வைத்த நீதி. குலதெய்வ கோவில் அருகில் இருப்பவர்கள் மாதத்திற்கு ஒருமுறை அதுவும் பௌர்ணமி நாட்களில் வழிபட்டால் அவர்களுக்கு பரிபூரணமான அருள் கிட்டும்.

- Advertisement -

அவ்வாறு நாம் குலதெய்வத்தை வழிபடும் பொழுது குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு இளநீர் வாங்கித் தர வேண்டும். மேலும் பொங்கல் வைத்து படையலிடும் பொழுதும் இளநீரை வைத்து படையல் இடவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

மேலும் இளநீரை வைத்து வீட்டிலேயே குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான வழிமுறையும் உள்ளது. அதற்கு ஒரு கலச செம்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதை செய்வதற்கு விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையே உகந்த நேரம் ஆகும். அந்த செம்பில் 100மிலி அளவிற்கு சுத்தமான இளநீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் 2 துளசி இலைகளை போட்டு மூடி விட வேண்டும். இந்த செம்பை குலதெய்வமாக பாவித்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் இந்த செம்பை தரையில் வைக்காமல் ஒரு முக்காலியை போட்டு அதன் மேல் வைக்க வேண்டும். பிறகு குலதெய்வத்தின் பெயரை கூறியவாறு 16 முறையோ, 27 முறையோ மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கடைசியாக வசம்பை நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் புகையை செம்பிற்கு காட்ட வேண்டும். அதாவது வசம்பு தூபம் காட்ட வேண்டும்.

இரவு படுக்க செல்வதற்கு முன் இந்த செம்பை எடுத்து அதில் இருக்கும் இளநீரை வீட்டில் இருக்கும் அனைவரும் பருக வேண்டும். பிறகு சுத்தமான நீரை அதில் பிடித்து வைத்து துளசி, பச்சை கற்பூரம், லவங்கம் போன்றவற்றை போட்டு மூடி பூஜை அறையிலேயே வைத்து விட வேண்டும். மறுநாள் காலை பூஜையை முடித்துவிட்டு இந்த தீர்த்தத்தை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வழங்கிவிட்டு, மறுபடியும் இளநீரை அதில் ஊற்றி வைத்து மேல் சொன்ன முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கப்பெறும். மேலும் குலதெய்வத்தின் அருளால் வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும், வேலையிலும் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் வாங்க வேண்டும் என நினைத்த உடனே தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க வியாழக்கிழமையில் இந்த மரத்தடியில் பூஜை செய்தால் போதும். வீட்டில் தங்கம் கிடுகிடுவென மலை போல குவிய தொடங்கி விடும்.

குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கலசத்தை அறுபடை வீடுகளில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகனின் பெயரைக் கூறி வழிபட வேண்டும்.

- Advertisement -