தீராத கடன் தீர, தீராத நோய் தீர, தீராத பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த 1 இலையை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினாலே போதும்.

nochi-ilai
- Advertisement -

வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய பெரிய கஷ்டம் என்னவென்றால் அது பண கஷ்டம் தான். அந்த பண கஷ்டம் எதனால் வருகிறது. விரயங்கள், வீண் செலவுகள், அதிகமாவதால் கையில் இருக்கும் பணம் கரைந்து போகும். பின்பு நம்முடைய அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது ஒரு பக்கமிருக்க, வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத வியாதிகள் இன்னல்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கான விரயங்களும் அதிகம் தான். தீராத வியாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வீண் விரயங்களை தடுக்க, கடன் சுமையில் இருந்து தப்பிக்க, அதி அற்புதம் வாய்ந்த அந்த காலத்தில் சித்தர்கள் சொல்லி வைத்துள்ள சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Nochi-leaf

இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்த போகும் அந்த அதி அற்புதம் வாய்ந்த இல்லை என்ன தெரியுமா. நொச்சி இலை, பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இந்த இலையின் மருத்துவ குணத்தை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இயற்கையாகவே நொச்சி இலைக்கு வியாதிகளை விரட்ட கூடிய தன்மை உண்டு. இந்த நொச்சி இலையை வைத்து நம்முடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். அந்த தீர்வினை தெரிந்துகொள்வதற்கு முன்பு இந்த நொச்சி இலையை பற்றிய மற்றொரு அறிய தகவலையும் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வில்வ இலைக்கு இணையான மற்றொரு இலை என்றால், அது நொச்சி இலை தான். வைத்தீஸ்வரன் கோவிலில் அங்காரகனுக்கு இந்த நொச்சி இலைகளை கொண்டு தான் அர்ச்சனை செய்யப்படுகின்றது. நொச்சி இலை மாலையை அங்காரகனுக்கு மாலையாக அணிவித்து வழிபாடு செய்தால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு சீக்கிரமே விடிவு காலம் பிறக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் இன்றைக்கு நாம் சில பரிகாரங்களை பார்க்கப் போகின்றோம்.

Nochi-leaf

தீராத கடன் சுமை, தீராத நோய் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் முருகப்பெருமானுக்கு நொச்சி இலை மாலையை போட்டு வழிபாடு செய்யலாம். உங்கள் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு உங்கள் கைகளாலேயே நொச்சி இலையை மாலையாக கட்டி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதேபோல் சிவபெருமானுக்கும் நொச்சி இலையில் மாலை கட்டி போட்டால், நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும். கடன் சுமை இருந்தாலும் சரி, தீராத நோய் இருந்தாலும் சரி, இல்லை வேறு சில தீராத பிரச்சினைகள் உங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இருந்தாலும் சரி, அந்த பிரச்சினைகளுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நொச்சி இலை மாலையை இறைவனுக்கு சாத்தி வழிபாடு செய்யுங்கள். இது ஒரு பரிகாரம்.

- Advertisement -

இரண்டாவதாக ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. நொச்சி இலையை செடியில் இருந்து பறித்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதை சுத்தமான தண்ணீரில் ஒரு முறை கழுவி துடைத்து விடுங்கள். அந்த இலையில் உங்களுடைய பிரச்சனையை எழுத வேண்டும். எடுத்துக்காட்டுக்கு மீளமுடியாதகடன் பிரச்சினையில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரையும், அந்த கடன் தொகையையும் இந்த இலையில் எழுதி உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

kadan

மறுநாள் காலை எழுந்தவுடன் பழைய இலையை தூக்கி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மீண்டும் அடுத்த நாள் புதிய இலையில் தான் உங்களுடைய பிரச்சனையை எழுத வேண்டும். இவ்வாறு தினந்தோறும் அந்த ஆண்டவனை பிரார்த்தனை செய்து நொச்சி இலையில் உங்கள் பிரச்சனையை எழுதி தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால், எப்பேர்ப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வினை அந்த ஆண்டவன் கூடிய விரைவிலேயே காட்டிக் கொடுப்பான்.

sleep1

இப்படி எத்தனை நாட்கள் செய்வது. பரிகாரம் செய்வது என்பது அவரவர் கஷ்டத்தை பொறுத்தது. உங்களுடைய கடன் சுமை எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ என்பது உங்களுக்குத்தான் தெரியும். கடன் சுமைக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை என்றால் 11 நாட்கள் பரிகாரத்தினை செய்து பாருங்கள். உங்களுடைய பிரச்சினைக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் விடிவு காலம் வருவதை நீங்களே உணர்வீர்கள். (இதேபோல் தீராத நோய் தீர வேண்டும் என்றும் அந்த இலையில் எழுதி பரிகாரத்தை செய்யலாம்.) பரிகாரம் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கே வந்த பின்பு தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து அனைவரும் பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -