எதிரிகள் தொல்லை நீங்க பிரத்யங்கிரா தேவி வழிபாடு

pratyangara prayer
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயம் ஏதாவது நடந்தால் தான் நம் வாழ்க்கை முன்னோக்கி செல்கிறது என்று அர்த்தம். அப்படி நல்ல விஷயங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக நம் உடன் இருப்பவர்களோ அல்லது நம்முடைய விரோதிகளோ ஏதாவது ஒரு செயலை செய்து நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்து வைப்பார்கள். அப்படிப்பட்டவர்களை தான் நாம் எதிரிகள் என்று கூறுவோம். இதில் மறைமுக எதிரிகளாக இருப்பவர்களே மிகவும் கடினமானவர்களாக திகழ்கிறார்கள்.

இப்படிப்பட்ட எதிரிகள் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்வதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள். அப்படி அவர்கள் எந்த அளவிற்கு சென்றாலும் அவை அனைத்தையும் தடை செய்யக்கூடிய ஒரு அற்புத தெய்வமாக திகழ்வதுதான் பிரத்யங்கரா தேவி. பிரத்யங்கிரா தேவியை எந்த முறையில் நாம் வழிபட்டால் எதிரிகள் அனைவரும் அழிந்து விடுவார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக மிருகத்தலையும் மனித உருவமும் கொண்ட தெய்வங்கள் மிகவும் உக்கிரமான தெய்வங்களாகவும், அதர்வண தெய்வங்களாகவும் கருதப்படுகிறார்கள். மேலும் அவர்களிடம் நாம் உண்மையான பக்தியுடன் வேண்டினோம் என்றால் அனைத்து விதமான தீய சக்திகளையும் நம்மிடம் இருந்து விலக்கி நமக்கு நன்மைகளை தருவார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களாக பலரும் வேண்டி விரும்பி வணங்கக்கூடிய தெய்வங்கள் நரசிம்மர், வராகி அம்மன், பிரத்யங்கிரா தேவி போன்றவர்கள். இதில் விநாயகர் மட்டும் விதிவிலக்கு.

பொதுவாக எதிரிகளின் தாக்கம், எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அந்த இடத்தில் ராகு வேலை செய்கிறார் என்று அர்த்தம். ராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், ராகு திசை, ராகு புத்தி போன்ற எது நடந்தாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு ராகுவால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்தில் எதிரிகளால் தடைகள் வராமல் இருப்பதற்கும் பிரத்யங்கரா தேவியை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு.

- Advertisement -

முழு மனதோடு நாம் வழிபடும் பொழுது அந்த அம்மன் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தையும் விலக்கிவிடுவாள். மேலும் நமக்கு யாரு தீமை செய்திருக்கிறார்களோ அவர்களையும் அழித்துவிடுவாள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட இந்த உக்கிரமான பிரத்யங்கிரா தேவி வழிபாட்டை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும், ராகுவால் ஏற்பட்ட பாதிப்புகள் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலத்தில் அருகில் இருக்கக்கூடிய பிரத்யங்கிரா தேவி ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு செவ்வரளி மலர்கள், வாசனை மிகுந்த மலர்கள் இவற்றை அம்மனுக்கு கொடுத்து தீபமேற்றி முழுமனதோடு அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து ஏழு வாரங்கள் பிரத்யங்கிரா தேவி அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். இதை அடுத்த ஒரு சில வாரங்களிலேயே உங்களால் கண்கூடாக காண முடியும்.

இதையும் படிக்கலாமே பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்

மிகவும் உக்கிரமான தெய்வமாக கருதக்கூடிய பிரத்யங்கிரா தேவி இடம் சரணாகதி அடைந்து முழு மனதுடன் வேண்டுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகள் அனைவரும் நீங்கி விடுவார்கள்.

- Advertisement -