இன்று வைகுண்ட ஏகாதேசி. பெருமாளை இப்படி தரிசனம் செய்யுங்கள்.

perumal-3

பொதுவாக நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டும் என்று சில வழிமுறைகள் நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிள்ளையாரை தரிசனம் செய்தால் தோப்புக்கரணம் போட்டு, 3 பிள்ளையார் கொட்டு கொட்டிக்கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்தது. நவகிரகங்களுக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்ற வேண்டும் என்பதும் நாம் அறிந்தது. அதேபோல், சிவன் கோவிலுக்கு சென்று சிவனை தரிசிப்பதற்கு முன்பு நந்தியிடம் அனுமதி பெற வேண்டும். இப்படியாக ஒவ்வொரு இறைவனுக்கும், ஒவ்வொரு முறையை இன்று வரை நாம் கடைப்பிடித்து வருகின்றோம். கோவிலுக்குள் சென்றால் முதலில் நம்முடைய மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த இறைவனின் மூல மந்திரத்தை  ஜெபிப்பது நன்மை தரும். தேவையற்ற அனாவசியமான மற்ற சிந்தனைகளை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். நாம் பெருமாள் கோவிலுக்கு சென்றால், அந்த பெருமாளை எப்படி சேவிப்பது என்பதை பற்றிதான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகின்றோம்.

Perumal

பெருமாள் கோவிலில் உங்கள் காலடிகளை எடுத்து வைத்தவுடன் உங்கள் மனதிற்குள் ‘பெருமாளே’ ‘கோவிந்தா’ ‘ஓம் நமோ நாராயணா’ என்ற நாமங்கள் உச்சரிக்கப்பட வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாலே போதும், நமக்கு கோடி புண்ணியம் கிடைத்து விடும்.

அடுத்ததாக பெருமாள் என்றாலே, ஆடை அலங்காரங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். காண கோடி கண்கள் வேண்டும். பெருமாளுக்கும் பிரம்மாண்டமான அலங்காரம் என்றால் தான் மிகவும் பிடிக்கும். இதனால் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் உங்களால் முடிந்தவரை நல்ல ஆடையை உடுத்திக் கொண்டு செல்வது ஒரு சிறப்பு.

perumal

சிவன் கோவிலில் இருக்கும் அம்மனை ‘அம்பாள்’ என்று அழைப்பார்கள். ஆனால் பெருமாள் கோவிலில் இருக்கும் அம்மனை ‘தாயார்’ என்றுதான் அழைக்கவேண்டும். முதலில் தாயாரை தரிசித்து விட்டு பின்புதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.

- Advertisement -

பெருமாள் சன்னதிக்கு வெளியில் இருக்கும் கருடரிடமோ அல்லது ஆஞ்சநேயரிடமோ அனுமதி பெற்றுக் கொண்டு தான் பெருமாளே தரிசனம் செய்ய உள்ளே செல்ல வேண்டும்.

சிலர் கோவிலுக்குள் சென்று அந்த இறைவனை தரிசிக்கும் போது கண்களை மூடிக்கொண்டு வேண்டிக் செய்வார்கள். ஆனால் பெருமாளை தரிசனம் செய்யும்போதும், அவரை நினைத்து வேண்டிக் கொள்ளும் போதும் அவரின் அலங்கார திருமேனியை நன்றாக பார்த்துக் கொண்டேதான் தரிசிக்க வேண்டும். கண்களை மூடி தரிசனம் செய்யக்கூடாது.

Perumal

பெருமாளை தரிசனம் செய்த பின்பு பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம், சடாரி வழங்கப்படும். பெருமாள் கோவிலில் தரும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. பெண்களாக இருந்தால் முந்தானையை கையில் பிடித்துக் கொண்டு தான் பெருமாள் தீர்த்தத்தை வாங்க வேண்டும். ஆண்களாக இருந்தால் வேட்டி நுனியையோ அல்லது அங்கவஸ்த்திரத்தின் நுனியை பிடித்துக் கொண்டுதான் தீர்த்தத்தை வாங்கி பருக வேண்டும். சிலர் சிறிது தீர்த்தத்தை பருகி விட்டு, மீதமுள்ள தீர்த்தத்தை தலையில் தடவிக் கொள்வார்கள். அப்படி செய்வது தவறான ஒன்று. நம் கையில் இருக்கும் தீர்த்தத்தை நாம் குடிக்கும் போது அதில் நம் எச்சிலானது பட்டுவிடும்.  பெருமாள் கோவிலில் தீர்த்தத்திற்கு பிறகு சிடாரியானது நம் தலையில் வைக்கப்படுகிறது. எச்சில் பட்ட தீர்த்தம் உள்ள தலையின் மீது சடாரி ஆசீர்வாதத்தை பெறுவது தவறு. ஆகவே பெருமாள் கோவில் தீர்த்தத்தை முழுமையாக குடித்து விடுங்கள். மீதமிருந்தால் கீழே விட்டுவிட்டு கையை துடைத்துக் கொள்ளுங்கள். தவிர எக்காரணத்தினாலும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று அந்தப் பெருமாளை மனதார வேண்டிக்கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த 5 தவறை உங்கள் வீட்டில் செய்தால் செல்வம் சேரவே சேராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vaikunta ekadasi valipadu Tamil. Vaikunta ekadasi vazhipadu murai. Perumal valipadu Tamil. Perumal valipadu murai Tamil.