எந்த முக அமைப்பை உடையவருக்கு என்ன குணம் இருக்கும் தெரியுமா?

4390
astrology
- விளம்பரம் -

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவத்தில் முகம் இருக்கும். அதை வைத்து அவர்களின் குணாதிசயங்களை எளிதில் கண்டறிய முடியும் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அதன் படி எந்த வடிவ முகம் கொண்டவர்களுக்கு என்ன குணாதிசயங்கள் இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உருண்டை வடிவ முக அமைப்பு

vattam

- Advertisement -

இந்த வடிவிலான முகம் அழகிய நிலவு போன்று திகழும். இத்தகைய முக அமைப்பைப் பெற்றவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். பூஜை, விரதங்களில் அதீத ஈடுபாடு இருக்கும். பெண்ணுக்கு இதுபோன்ற முக அமைப்பு இருந்தால், அவள் லட்சியவாதியாகத் திகழ்வாள்.

உயர்ந்த மனோபாவமும், சிறந்த குணமும் அவளிடம் நிறைந்திருக்கும். இந்தப் பெண்ணால், அவளுடைய கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும்.

சதுர வடிவ முகம்

square face

வீரம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். எளிதில் ஆவேசப் படுவார்கள். எந்தவிதமான பிரச்னைகளையும் உடல் வலிமையைக் கொண்டு தீர்க்க முற்படுவார்கள்.

இவர்களில் சிலருக்குக் காதல் திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவிலே திருமணம் நடந்தாலும், வாழ்க்கைத் துணை மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாகத் திகழ்வர். எவருக்கும் எளிதில் பணிந்துபோக விருப்பம் இருக்காது. இசையில் அதீத ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, அந்தத் துறையில் புகழ் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.

நீள் சதுர முகம் 

rectangle

இத்தகைய முக அமைப்பைப் பெற்றவர்கள், அடக்கமும் அமைதியும் நிறைந்தவர்களாகத் திகழ்வார்கள். எனினும் செயல்களில் வேகம் இருக்காது. எந்த விஷயத்தையும் பலமுறை யோசித்துக் கையாள்வார்கள். மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டாலும், தனக்கு உரிய பிரச்னைகளில், நிதானமாக யோசித்தே முடிவெடுப்பார்கள். குடும்பத்தில் மிகப் பணிவுடன் நடந்துகொள்வார்கள். என்றாலும் அச்சம் என்பது என்னவென்று அறியாத தைரியசாலிகளாகவும் திகழ்வர்.

முக்கோண வடிவ முக அமைப்பு

traiangle face

இத்தகைய முக அமைப்பை ஓர் ஆண் பெற்றிருந்தால், அவர்கள் மிகவும் தந்திரசாலியாக இருப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மற்றவர்களால் எளிதில் கணித்துவிட முடியாது. எந்த பிரச்னையையும் ராஜ தந்திரத்துடன் சமாளித்து வெல்வார்கள். எவரையும் நம்பமாட்டார்கள்.

கல்வியறிவு சுமார்தான் என்றாலும், அனுபவ அறிவு மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். அதிகம் உழைக்கமாட்டார்கள். குடும்ப வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் சரிசமமாக இருக்கும். பிள்ளைகளை கட்டுக்குள் கொண்டுவருவது கடினம்.திடீர் உயர்வும் திடீர் வீழ்ச்சியும் சர்வ சாதாரணமாக இருக்கும். எனினும் புரட்சிகரமானவர்களாகத் திகழ்வார்கள்.

முட்டை வடிவ முக அமைப்பு

egg shape face

இவ்விதமான முக அமைப்பு கொண்டவர்கள், நடுநிலை இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்கிவிடமாட்டார்கள். பின்விளைவுகள் குறித்த ஓர் அச்சப்பார்வை இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும்.இவர்களில் சிலர், தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள்; மற்றவர்களைக் குறைகூறவும் தயங்கமாட்டார்கள். பிணிகள் வரும் போகும் என்றாலும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

Advertisement