இனிமேல் வாழ வழியே இல்லை என்று தீராத பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் இந்த தெய்வத்தை வழிபடுவதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

prithiyangar devi yoga narachimar
- Advertisement -

வாழ்க்கையை வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இருப்பினும் வாழ வழியில்லாமல் நிலை தடுமாறி பிரச்சனைகளுக்குள் மாட்டி தவித்துக் கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கின்றனர். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புபவர்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது இந்த தேவியை மனதார வணங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை நல்லவிதமாக மாறும். அப்படிப்பட்ட தேவியை பற்றி தான் இந்த ஆன்மீக பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது எல்லோருக்கும் இருக்கும். ஆனால் வாழ்க்கையே பிரச்சினையாக இருந்தால் எப்படி வாழ்வது? அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து வெளிவர, நம்முடைய எதிரிகளிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள, நமக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருக்கக்கூடிய தெய்வமாக கருதப்படுபவள் தான் பிரத்யங்கிரா தேவி.

- Advertisement -

உக்கிர நரசிம்மரை யோக நரசிம்மராக மாற்றுவதற்காக சிவபெருமான் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்த பொழுது அவருடன் பக்க பலமாக அம்மன் எடுத்த அவதாரமே பிரத்யங்கிரா தேவி அவதாரம் ஆகும். சரபேஸ்வரரின் ஒரு ரெக்கையில் பிரத்யங்கிரா தேவி இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. உக்கிரமாக இருந்த நரசிம்மரை சரபேஸ்வரர் அவருடைய ரெக்கையை கொண்டு அனைத்து கொண்டதால் தான் அவர் உக்கிரம் தணிந்து யோக நரசிம்மராக காட்சியளித்தார் என்று கூறப்படுகிறது.

பிரத்யங்கிரா தேவி உக்கிர தெய்வமாக கருதப்பட்டாலும், தன்னை நம்பி வந்த பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அளிக்கும் தாயின் சொரூபமாகவே அருள் பாலிக்கிறாள். அப்படிப்பட்ட தாயுள்ளம் கொண்ட பிரத்யங்கிரா தேதியை நாம் தேய்பிறை அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் ராகு காலங்களில் வழிபடலாம். இந்த தேவிக்கு உகந்த நேரமாக கருதப்படுவது நடுநிசி நேரம். அதாவது இரவு 12 மணி. இந்த நேரத்தில் தேவியை நாம் வழிபட்டால் நம்முடைய வழிபாடு 100 சதவிகிதம் நிறைவேறும் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

- Advertisement -

இன்றளவும் பிரத்யங்கிரா தேவி இருக்கும் ஆலயங்களில் அமாவாசை தோறும் யாகங்கள் வளர்க்கப்பட்டு, அந்த யாகத்தில் மிளகாய் போடும் வழக்கம் இருந்து வருகிறது. எதிரிகளால் அல்லல் படுபவர்களும், நோய்களால் கஷ்டப்படுபவர்களும், இந்த யாகத்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அளவு மிளகாயை வாங்கி, தன் தலையை சுற்றி யாகத்தில் போடுவதன் மூலம் தங்களுடைய எதிரிகள் தொல்லையும், நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளும் தீரும்.

இந்த தேவியை நம் இல்லத்திலும் நாம் வழிபடலாம். பிரத்யங்கிரா தேவியின் புகைப்படத்தை வாங்கி வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாம் அல்லது ஒரு மண் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி வைத்து, அந்த தீபத்தில் பிரத்யங்கிரா தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம். பிரத்யங்கிரா தேவிக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய மலர்கள் மிகவும் பிடிக்கும். அந்த மலர்களை வைத்து பிரத்யங்கிரா தேவிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் பிரத்யங்கிரா தேவிக்கு பிடித்தமான நெய்வேத்தியமாக காரமான புளியோதரை திகழ்கிறது. இதை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

இதையும் படைக்கலாமே: இவர்கள் கையில் இருந்து இந்த நேரத்தில் ஒரே ஒரு ரூபாயை வாங்கி பாருங்கள். அப்பறம் என்ன ஜாக்பாட் அடித்தது போல பணமழை பொழிய தொடங்கி விடும்.

பிரத்யங்கிரா தேவியை நாம் வழிபடுவதால் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தீராத கடனும் தீரும். எதிரிகளை அழிப்பாள், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களின் நோயை தீர்த்து வைப்பாள். தீய சக்திகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் ஒழிப்பாள். வாழ வழியற்று துன்பப்படுபவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு புது வழியை காட்டி, அவர்கள் வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுப்பாள். தொழிலிலும், குடும்பத்திலும் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் விலக்கி, எதிரிகளை அழித்து, மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற நல்ல வழி காட்டுவாள்.

- Advertisement -