புரட்டாசி பௌர்ணமி வழிபாடு

chithra pournami
- Advertisement -

பௌர்ணமி இரவு வேளையில் வானில் தெரிகின்ற சந்திரனை சிறிது நேரம், கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலே, நமக்குள்ளே பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் என தாந்திரீக சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 12 தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கென்று தனி சிறப்புகள் உண்டு. அந்த வகையில் நாளைய புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற பயன்கள் என்ன என்பது குறித்தும் இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பு மாதமாக உள்ளது. பெரும்பாலானோர் இந்த மாதத்தில் ஊண் உணவுகள் மற்றும் ஆன்மீக சாஸ்திர தர்மத்தில் விலக்கப்பட்ட செயல்களை செய்வதை தவிர்த்து, விரதம் மேற்கொள்வார்கள். மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முடிந்து, நாளை ஞாயிற்று கிழமை புரட்டாசி பௌர்ணமி தினம் வருவது என்பது ஆன்மீக ரீதியில் பார்த்தால் சிறப்பான தினமாகும்.

- Advertisement -

அன்றைய தினம் காலையில் உங்கள் வீட்டிற்கருகில் இருக்கின்ற கோயில்களில் இருக்கின்ற நவ கிரக சந்நிதியில் சூரிய பகவானுக்கு கோதுமை தானியங்களை, சமித்தாக வைத்து தாமரை பூவை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு நெல் தானியங்களை சமித்தாக வைத்து, வெள்ளை தாமரை சமர்ப்பித்து மல்லிப்பூ மலர்களை சமர்ப்பித்து, 2 நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஆன்மீக அடிப்படையில் பார்க்கும் பொழுதும், அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுதும் சூரியனிலிருந்து கிடைக்கின்ற ஒளியையே சந்திர பகவான் பிரதிபலிக்கிறார் என்பது திண்ணம். எனவே நாளை பௌர்ணமி பிறக்கின்ற ஞாயிற்றுக்கிழமை தினத்தில் மேற்சொன்ன முறையில் நவகிரகங்களில் சூரிய, சந்திரர்களை வழிபாடு செய்வதால் அவர்களின் அருட்கடாச்சத்தை முழுமையாக பெறலாம்.

காலையில் மேற்சொன்ன முறையில் வழிபாடு செய்து முடித்த பின், மாலை நேரத்தில் அதே சிவ பெருமான் ஆலயத்தில் சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு மலர்மாலை அல்லது வாசம் மிக்க மலர்களை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கோயிலை மூன்று முறை வலம் வழிபட்டு வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

- Advertisement -

வீட்டுக்கு திரும்பிய பிறகு, பௌர்ணமி இரவு வேளையில் வானில் சந்திரனின் முழுமையான தோற்றம் தெரிந்த பிறகு ஒரு தாம்பாளத் தட்டில், தூப காலை வைத்து, சிறிதளவு கட்டி கற்பூரத்தை வைத்து, சூடம் ஏற்றி சந்திர பகவானுக்கு ஆரத்தி எடுத்து, வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: லட்சுமியின் அருளையும் மும்மூர்த்திகளின் ஆசியையும் முழுமையாக பெற உதவும் அரச இலை தீபம் பரிகாரம்

யோக சாஸ்திரம் அடிப்படையில் ஒரு மனிதனின் வலது கண்ணிற்கு சூரிய பகவானும், இடது கண்ணிற்கு சந்திர பகவானும் காரகத்துவம் வகிக்கின்றதாக கருதப்படுகின்றது. எனவே ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய இந்த புரட்டாசி பௌர்ணமி தினத்தில் சூரிய – சந்திரர்களை வழிபடுவதால் கண் பார்வை மங்குதல் மற்றும் இதர கண் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இல்லாமல் காக்கப்படுகிறார்கள்.

மேலும் உடல் மற்றும் மனம் பலம் பெறும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை சிந்தனைகளும், ஆற்றல்களும் பெருகும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ சேர்க்கை அதிகரிக்கும்.

- Advertisement -