நாளை புரட்டாசி வளர்பிறை பிரதோஷ தினத்தில் இவற்றை செய்தால் சிவன், பெருமாள், மகாலட்சுமி ஆகிய மூவரின் அருளையும் ஒரு சேர பெற்று வளமான வாழ்வை வாழலாம்.

sivan and perumal
- Advertisement -

தமிழ் மாதங்களில் ஆறாவதாக வருகின்ற மாதம் புரட்டாசி மாதம் என அழைக்கப்படுகிறது. பொதுவாகவே புரட்டாசி மாதம் என்பது மகா விஷ்ணுவாகிய பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு மாதமாக பக்தர்களால் கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில் வருகின்ற புரட்டாசி வளர்பிறை பிரதோஷம் ஆன்மீக ரீதியில் பார்க்கும்போது சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த பிரதோஷ தினத்தில் நாம் என்ன செய்தால் சிவபெருமான் மற்றும் திருமால் மற்றும் லட்சுமி தேவியின் அருளை ஒருசேர பெறலாம் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம் வழிபாடு

இந்த மாதம் நாளை வெள்ளிக்கிழமையன்று பிரதோஷம் வருகின்றது. பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது திருமாலின் பத்தினியான மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாளாகும். வெள்ளிக்கிழமைகளில் பொதுவாகவே பருப்பு சேர்த்த சமையல் வீட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். குறிப்பாக துவரம் பருப்பு என்பது மகாலட்சுமிக்கு உகந்த ஒரு தானியமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நாளை வெள்ளிக்கிழமையன்று துவரம் பருப்பு கொண்டு ஏதாவது ஒரு வகை பிரசாதத்தை உங்களுடைய கைகளால் சமைத்து, அதை பூஜையறையில் சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் திருமாலின் நாயகியான லட்சுமி தேவியின் அருளையும், சிவபெருமானின் அருளையும் ஒரு சேர பெறுகின்றோம்.

- Advertisement -

புரட்டாசி வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, அன்றைய நாள் முழுவதும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண சுத்தியுடன் எப்போதும் சிவபெருமான் நினைவோடு இருப்பது சிறந்தது. பிரதோஷ தினங்களில் உணவு, நீர் ஏதும் அருந்தாமல் விரதம் இருப்பதே சிறந்தது என்றாலும், தற்காலத்தில் அது அனைவருக்குமே சாத்தியப்படாத விடயமாக இருப்பதால் அன்றைய தினம் பால் மற்றும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ தினத்தன்று ரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு சிவ பெருமான் மற்றும் நந்தி தேவரின் அபிஷேகத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பெரும்பாலான சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதி இருக்கும். அங்கிருக்கும் பெருமாளுக்கு பிரதோஷ நேரத்திலேயே துளசி சாற்றி வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் கடன், உடல்நல பாதிப்புகள் நீங்க பெருமாள் அருள்புரிவார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தெருக்கோடியில் இருப்பவர்களை கூட, பல கோடிக்கு அதிபதியாக்கும் ஜாதிக்காய்.

வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். இம்முறையில் புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் சிவன், பெருமாள் மற்றும் லட்சுமி தேவி ஆகிய தெய்வங்களின் அருள் ஒரு சேர உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு நவகிரகங்களில் சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். திருமண தடை அகலும். தொழில், வியாபாரங்களில் இருந்த தொய்வு நிலை மாறி லாபம் உண்டாகும்.

- Advertisement -