இன்று புரட்டாசி முதல் நாள் விநாயகர் சதுர்த்தியுடன் வந்திருக்கும் இந்த அற்புதமான நாளில் பெருமாளுக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும். உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக மாறி விடும்.

perumal dheepam
- Advertisement -

எப்போதும் விநாயகர் சதுர்த்தியானது நமக்கு ஆவணி மாதத்திலேயே வந்து விடும். இந்த வருடம் புரட்டாசி வந்திருப்பது நமக்கு பல விசேஷ பலன்களை தருவதாக இருக்கிறது. புரட்டாசி என்றாலே அது பெருமாளுக்கு உரியது தான். அந்த நாளில் முழு முதல் கடவுளான விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதியும் வந்திருக்கும் இந்த நாளில் நாம் வீட்டில் செய்யக் கூடிய ஒரு எளிய பூஜை நம்முடைய செல்வ வளத்தை பெருமளவு அதிகரிக்கும். அப்படியான வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

புரட்டாசி முதல் நாள் பெருமாள் வழிபாட்டு முறை
இந்த வழிபாட்டிற்கு நீங்கள் எந்த செலவு செய்து எதையும் வாங்கி வணங்க வேண்டிய அவசியம் கிடையாது. அது மட்டுமல்லாது இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி என்பதால் அனைவர் வீட்டிலும் சதுர்த்தி வேலைகள் அதிகமாக இருக்கும். அதனால் மிக மிக எளிமையாக பெருமானை இன்றைய தினத்தில் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நாம் முதலில் செய்வது தீபம் ஏற்ற வேண்டும் அதாவது அகல் விளக்கை நன்றாக சுத்தமாக கழுவி துடைத்த பிறகு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் மஞ்சளை குழைத்துக் கொள்ளுங்கள் இதற்கு தரமான மஞ்சளாக வாங்கிக் கொள்ளுங்கள். சாணம் கிடைத்தால் இன்னும் நல்லது அதை குறைத்து அதை உருண்டையாக பிடித்து அதன் மேல் இந்த அகலை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படம் அல்லது மகாலட்சுமி தாயார் படம் கோமதி சக்கரம் சங்கு என பெருமாள் தொடர்பான எந்த ஆன்மீக பொருள் இருந்தாலும் அதை சுத்தம் செய்த பிறகு துளசியிலா ஆன மாலை அல்லது கொஞ்சம் துளசியாவது அதற்கு வைத்து விடுங்கள். மற்றபடி இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் படம் விக்கிரகம் எல்லாம் முன்னமே சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு எல்லாம் வைத்து தயாராக தான் இருக்கும். ஆகையால் இந்த துளசியை மட்டும் மறக்காமல் வைத்தாலே போதும்.

- Advertisement -

அடுத்ததாக தயார் செய்து வைத்த அந்த அகல் தீபத்தை பெருமாள் படத்திற்கு முன்பாகவோ அல்லது வீட்டில் கிழக்கு திசையை பார்த்தவாறு பூஜை அறையில் ஏதேனும் ஒரு இடத்தில் இதை வைத்து விடுங்கள் மற்ற இடங்களிலும் வைத்து ஏற்றலாம்
ஆனால் பூஜை அறையில் வைத்து ஏற்றும் பொழுது மேலும் பல விசேஷமான பலன்களை கொடுக்கும். அப்படி வைத்த பிறகு இந்த அகல் தீபத்தை ஏற்றி வைத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக பெருமாளுக்கு மிகப் பிடித்த நெய்வேத்தியமாக பசும்பால் கிடைத்தால் நல்லது அல்லது சாதாரண பாலாக இருந்தாலும் அதை காய்ச்சி அதில் இனிப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பிற்கு கல்கண்டு வெல்லம் நாட்டுச்சர்க்கரை சர்க்கரை என எது சேர்த்தாலும் பரவாயில்லை ஒரே ஒரு ஏலக்காயை அதில் சேர்த்த பிறகு இதை மட்டும் நெய்வேத்தியமாக பெருமாளுக்கு படைத்தால் போதும். அதன் பிறகு படத்திற்கு முன்பாக அமர்ந்து ஓம் நமோ நாராயணாய என்று இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: இழுத்து மூடும் நிலையில் உள்ள வியாபாரம் கூட சூடு பிடித்தது லட்ச லட்சமாக லாபத்தை சம்பாதிக்க இந்த ஒரு பொருளை தானமாக தந்தாலே போதும்.

இந்த தீபமும் மந்திரமும் மிகவும் முக்கியம். இதை இரண்டும் தான் இன்றைய தினம் நீங்கள் தவறாமல் செய்ய வேண்டிய வழிபாடு. இந்த தீபம் இன்று நாள் முழுவதும் உங்கள் வீட்டில் எரிந்தால் பல சுபிட்சத்தை தரும் முடியாதவர்கள் வழிபாடு நேரத்திலும், மாலை நேரத்திலும் ஏற்றினால் போதும். புரட்டாசி முதல் நாளான இன்று பெருமாளை இந்த எளிமையான வழிபாடு செய்தாலே போதும் உங்கள் வீடு தேடி செல்வ நலன்கள் வந்து சேரும்.

- Advertisement -