புரட்டாசி மாத ராசிபலன்- 12 ராசிக்குமான துல்லிய கணிப்பு

Puratasi month rasi palan

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகின்றது. ஒன்பதாம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் கைக்கூடி வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுமானவரை அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. சமூக சேவைகள் தொடர்பான விஷயத்தில் ஈடுபடுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு பொறுப்புகள் குறைந்து மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புரட்டாசியில் வரக்கூடிய விசேஷ தினங்களில் இறை வழிபாடுகளில் ஈடுபட்டால் அமோகமான பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு எதிராக இருந்து வந்த வழக்குகள் சாதகமாக அமையலாம். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். அன்னதானம் செய்வது உங்கள் ராசிக்கு இந்த மாதம் மன அமைதியை உண்டாக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபங்கள் அதிகரிக்கக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. சூரியனுடன் புதன் இணைந்திருப்பதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கடன் பிரச்சினைகள் விரைவாக தீரக் கூடிய யோகம் உண்டாகும். ரிஷப ராசிக்காரர்கள் புதிய தொழில் துவங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். ராசியாதிபதி சாதகமான பலன்களை தருவதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் புதிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. சுபகாரிய விஷயங்கள் இப்போதைக்கு சற்று தள்ளி வைப்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஒரு சிலருக்கு வீடு, மனை போன்ற முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். சிவ வழிபாடு செய்து வர நன்மைகள் பிறக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகரிக்கக்கூடிய மாதமாக அமைய இருக்கிறது. ராசி அதிபதி புதன் உச்சம் பெற்றிருப்பதால் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரித்து பொருளாதார நிலையும் ஏற்றத்தில் பயணிக்கும். இதுவரை தள்ளி சென்ற சுபகாரிய முயற்சிகள் இனி கைகூடி வரும். கணவன்-மனைவி இடையே இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வாகன ரீதியான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். திடீரென உடல் ஆரோக்கியத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது மனநிம்மதிக்கு வழிவகுக்கும். சூரியனை வணங்கி வர நன்மைகள் நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகள் அதிகரிக்கக்கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் பேச்சில் கனிவும், பொறுமையும் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருக்கலாம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறைந்துவிடும். தனவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் பொருளாதார ரீதியான பிரச்சனைகளையும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை குறையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். பெண்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகக்கூடும் என்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படலாம். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் கொடுக்கக்கூடிய மரியாதை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சமூகத்தில் உங்களுக்கு இருக்கின்ற மரியாதையும், அந்தஸ்தும் கூடும். குடும்பத்தில் குதூகலம் அமைதி அதிகரிக்கக்கூடும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விரைவில் சரி செய்து விடுவீர்கள் என்பதால் பிரச்சனை இல்லை. தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். மாத பிற்பகுதியில் சுப விரயங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுமானவரை பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. பணம் உங்கள் கையில் இருந்து மற்றவர்கள் கைகளுக்கு சென்று விட்டால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமான பலன்களை தரும். வீட்டில் புதிய பொருட் சேர்க்கை உண்டாகக்கூடும். பெண்களின் விருப்பங்கள் நிறைவேறக் கூடிய அற்புதமான மாதமாக அமையும். சிவ வழிபாடுகள் மேற்கொண்டால் நன்மைகள் நடக்கும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழில் ரீதியான விஷயத்தில் சிறப்பான மாதமாக இருக்கிறது. வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பான விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அமோகமான பலன்களை தரும். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவால் நன்மைகள் நடைபெறும். பெண்களுக்கு புதிய பொருட் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சகோதர சகோதரிகளின் வழியே அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிரிகள் தொல்லை நீங்கும் வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை உடல் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் அக்கறை தேவை. பெருமாள் கோவிலுக்கு சென்று வர மன அமைதி கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும் இனிய மாதமாக அமைய இருக்கிறது. வருமானம் தேவைக்கு ஏற்றபடி சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும் உத்தியோக மாற்றம், இடமாற்றம் போன்றவை நிகழக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இணக்கமாக இருந்து கொண்டால் பாதி பிரச்சனை சமாளித்து விடலாம். உற்றார், உறவினர்களின் ஆதரவு குறையும் என்பதால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள், குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த ஒற்றுமை குறையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். தகுந்த சமயத்தில், தகுந்த அறிவுரை கிடைக்கும். வாகன ரீதியான பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முருக வழிபாடு செய்துவர மன நிம்மதி இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உற்சாகம் அதிகரிக்கக்கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக் கொள்ள முடியும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கக்கூடும். வராகி வழிபாடு செய்து வர நன்மைகள் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. நீண்டநாள் எதிர்பார்த்திருந்த முயற்சிகள் முடிவுக்கு வரும். இதுவரை இருந்து வந்த உடல் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபம் காண்பீர்கள். பெண்களுக்கு இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் விரயங்கள் ஏற்படக்கூடும் ஆனால் அதை சுப விரயமாக இருப்பதால் பிரச்சனை இல்லை. பொருளாதார ரீதியான விஷயத்தில் ஏற்ற இறக்கம் இருப்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கூடுமானவரை தேவையில்லாத கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். பைரவர் வழிபாடு செய்துவர மன நிம்மதி பிறக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் எதிலும் நிதானமும் பொறுமையும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்க கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்குவதற்கு சாதகமான அமைப்பை இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் அயராத உழைப்புக்கு பாராட்டும் மதிப்பும் அதிகரிக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வாகன ரீதியான விஷயத்தில் வீண் விரயங்களை சந்திக்கக்கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆஞ்சநேயரை வணங்கி வர ஆபத்துகள் நீங்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் விரைவாக தீர்ந்து நல்ல புரிதல் உண்டாக கூடும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுமானவரை கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு அனுகூலமான பலன்கள் உண்டு. நல்ல செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மன அமைதி தரும். தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வழக்குகள் சாதகமான பலன்கள் தரும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வர நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த சிறப்பான வேலை அமையும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வதால் முன்னேற்றம் காண முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி கூட்டாளிகளின் ஆதரவால் சிறப்பான முன்னேற்றம் காணலாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்வான நிகழ்வுகள் நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. குருபகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே
வீட்டின் இந்த திசையில் இதை மட்டும் வைத்தால் செல்வ வளம் பெருகுமாம் தெரியுமா?