எந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

bag1

நாம் வெளியே செல்லும்போது, கட்டாயம் நம்முடனே எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான பொருட்களில் பர்ஸ்சும், ஹேண்ட் பேகும் அடங்கும். இந்த இரண்டு பொருள்களில் ஏதாவது ஒரு பொருளையாவது, கையில் எடுத்து செல்வோம் அல்லவா? நாம் பிறந்த தேதிக்கு ஏற்ப, எந்த நிறத்தில் ராசிக்கல் வைத்து மோதிரம் அணிய வேண்டும், எந்த நிறத்தில் உடை அணிய வேண்டும், சிலபேர் பிறந்த தேதிக்கு ஏற்ப தன்னுடைய பெயரை கூட மாற்றி வைத்துக் கொள்வார்கள். இப்படியிருக்க பணம் வைக்கும் பர்ஸை, பிறந்த தேதிக்கு ஏற்ப, எப்படி வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதில் தவறில்லையே! நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள்? நீங்கள் பிறந்த தேதிக்கு, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய பர்ஸ் எது தெரிந்து கொள்ளலாமா?

suruku-pai

நீங்கள் 1ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 1 ஆக இருந்தாலும், காட்டன் துணியாலான பர்ஸை பயன்படுத்துவது மிகவும் நல்லது. முடிந்தால் சுருக்குப்பை போலவும், பணம் வைக்கும் பர்ஸை பயன்படுத்தலாம். மஞ்சள் நிற சுருக்குப் பை போல் இருந்தாலும் சரி. ஹேண்ட்பேக் வடிவத்தில் இருந்தாலும் சரி. எதுவுமே இல்லாட்டியும், ஒரு மஞ்சள் பை பயன்படுத்துங்கள். எந்தவித டிசைனும் போடப்படாமல் ப்ளைனாக, காட்டன் துணி இருப்பது நல்லது.

நீங்கள் 2, 5, 6 ம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 2, 5, 6 ஆக இருந்தாலும், உங்களது பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக் காட்டன் துணியில் இருப்பது நல்லது. அதில் பூக்களாலோ அல்லது வேறு ஏதாவது டிசைன்ஸ் போட்டு, அலங்கரித்த பர்ஸை வாங்கிக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேவையற்ற பொருட்களை பர்ஸ்ஸில் வைப்பதை நீங்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரை ஹேண்ட் பேக்கில், நோட்டுப் புத்தகம், பணம், உணவுப்பொருட்கள் இவைகளை மட்டும் வைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பர்ஸ்ஸில் வைக்காதீர்கள்.

purse

நீங்கள் 3ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 3 ஆக இருந்தாலும், ஆடம்பரம் இல்லாத எந்த பர்ஸை வேண்டுமென்றாலும், நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய பர்ஸ் சிம்பிளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நீங்கள் 4ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 4 ஆக இருந்தாலும், லெதரால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக் வாங்குவது மிகவும் நல்லது. முடிந்தவரை அந்த ஹேண்ட்பேகை எடுத்து, இடதுபக்க தோளில் மாட்டிக் கொள்ளுங்கள், அல்லது வலதுபக்க தோளில் மாட்டிக் கொள்ளுங்கள். இரண்டு கைகளிலும் சேர்த்தார் போல், பின்பக்கம் பையை மாட்டிக் கொள்வது, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்காது.

bag

நீங்கள் 7ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 7 ஆக இருந்தாலும், உங்களது பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக், பல வண்ணங்களில் இருக்க வேண்டும். அதாவது மல்டிகலர் என்று சொல்லுவார்கள் அல்லவா! அப்படி வாங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும்.

breefcase

நீங்கள் 8ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும், அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 8 ஆக இருந்தாலும், மெட்டல் ஜிப், மெட்டல் பட்டன், மெட்டல் கிளிப், வைத்த பர்ஸ் அல்லது ஹேண்ட் பேகை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.

hand-bag

நீங்கள் 9ஆம் தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் அல்லது நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் ஒன்பதாக இருந்தாலும், பிரீஃப் கேஸ் என்று சொல்லுவார்கள் அல்லவா? பெட்டி மாடலில் இருக்கும். இந்த பிரீஃப் கேஸ் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை தரும். முடியாதவர்கள், காட்டன் துணியாலான ஹேண்ட்பேக், பரிஸை பயன்படுத்தலாம். பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களில் ப்ளைன் பாக்ஸ் பயன்படுத்துவது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
காலையில் எழுந்ததும் நீங்க இதெல்லாம் செய்வீங்களா? செய்யலைன்னா! நீங்க வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டம் தான் பாத்துக்கங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.