புத பகவானின் அருளைப் பெற தானம்

puthan children study
- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதனுக்கு அத்தனை சிறப்பு உண்டு. புதபகவான் என்றாலே புத்தி கூர்மை தான். ஒருவர் வாழ்க்கையில் நல்ல புத்தி கூர்மையுடன் திகழ வேண்டும் எனில் அதற்கு புகபகவானின் அருள் நிச்சயமாக தேவை. இவரின் அருள் பெற்றவர் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

இதற்கு காரணம் புகபகவான் புத்தி காரகன். இவர் சந்திர பகவானின் மைந்தனாக சொல்லப்படுகிறது. சந்திர பகவான் மன ஓட்டத்திற்கு சொந்தக்காரர் புத்தியை நிலைப்படுத்துபவர். இவர்கள் இருவரின் ஆசியும் ஒரு சேர பெற்றால் அறிவு ஞானம் அதிகரிக்கும். இந்த யோகம் நமக்கு அமைந்து விட்டால் போதும் நம் குழந்தைகள் எதிர்காலம் நல்ல முறையில் திகழும்.

- Advertisement -

புத்தி கூர்மைக்கு மட்டுமின்றி காரியத்தடை, வியாபார தடை, குடும்ப முன்னேற்றம் போன்றவற்றிற்கும் இவரின் அருள் முக்கியம். இவரின் அருளை பெறுவது எப்படி அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க புதபகவானே வணங்கும் முறை

புதபகவானை வழிபடுவதற்கு புதன்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த புதபகவானுக்குரிய அதிதேவதை எனில் அவர் மகாவிஷ்ணு. புதபகவானுக்கு உரிய நிறம் பச்சை. ஆகையால் புதன்கிழமையில் பச்சை நிறத்தில் ஆடை அணிவது உதவவானின் அருள் கிடைத்ததோடு புத தோஷமும் நீங்கும். அத்துடன் புதன்கிழமை அன்று தானம் செய்ய வேண்டும்.

- Advertisement -

புதன்கிழமையில் பசுவிற்கு பசும்புல், பச்சை பயிறு போன்றவற்றை தானமாக கொடுக்கும் பொழுது மன நிம்மதி உற்சாகம் போன்றவை அதிகரிக்கும். மேலும் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமையும் என்று சொல்லப்படுகிறது. அதைப் போல் பிராமணருக்கு பச்சை பயிறு தந்தால் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். திருநங்கைகளுக்கு பச்சை நிறத்தில் ஆடை தரும் போது நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இத்துடன் இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள்.

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை புதன்கிழமையில் புதன் ஹோரையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு சொல்லுங்கள் வேண்டும். அத்துடன் புதபகவானுக்குரிய ஆயில்யம் கேட்டை ரேவதி நட்சத்திர நாளில் இந்த மந்திர வழிபாட்டை செய்வது மேலும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: சந்தோஷம் பெருக விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டை பிள்ளைகள் செய்யலாம். பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்வது இன்னும் சிறப்பு. குழந்தைகள் செய்யும் போது அவர்களுடைய அறிவு திறன் மேம்படும். பெரியவர்கள் செய்யும் போது குழந்தைகளின் முன்னேற்றத்துடன் சேர்த்து தங்களின் முன்னேற்றத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். புதன் பகவானின் இந்த வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -