சந்தோஷம் பெருக விநாயகர் வழிபாடு

vinayagar valipadu
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி நாம் குறிப்பாக பார்க்கும் பொழுது எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், கண் திருஷ்டிகள், வாஸ்து தோஷங்கள் இவை அனைத்தும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கின்றன. இவை அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தரக்கூடிய விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானை நாம் அனுதினமும் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டு எந்த காரியத்தை செய்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மிகவும் எளிமையான பொருட்களில் அருள் தரக்கூடியவராக விநாயகர் பெருமான் திகழ்கிறார். எந்த பொருளில் பிள்ளையார் பிடித்து வைத்தாலும் அவர் மனம் மகிழ்ந்து அதை ஏற்றுக் கொள்வார்.

- Advertisement -

நம்மால் எந்த பொருட்களை நெய்வேதியமாக படைக்க முடியுமோ? அந்த பொருட்களை படைத்தாலும் அவர் மனமுவந்து ஏற்றுக்கொள்வார். அப்படி மிகவும் எளிமையான வழிபாட்டு முறைகளிலேயே திருப்தி அடையக் கூடிய தெய்வமாகத்தான் விநாயகப் பெருமான் திகழ்கிறார். விநாயகப் பெருமானை பல வேண்டுதலுக்காக நாம் வழிபடுவது உண்டு. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமாக வழிபட வேண்டும். ஆனால் கண் திருஷ்டி போகவும், எதிரிகளின் தொல்லை நீங்கவும், வாஸ்து தோஷம் நீங்கவும், வீட்டில் மகிழ்ச்சியை நிலைக்கவும் ஒரே ஒரு விநாயகரை வழிபட்டால் போதும். அவர்தான் வெள்ளெருக்கு விநாயகர்.

வெள்ளருக்கு விநாயகர் என்பவர் வெள்ளெருக்கு செடியின் செய்யக்கூடிய விநாயகர் ஆவார். இவரை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. முதலில் வெள்ளெருக்கு விநாயகரை வாங்கி வந்து அவரை மஞ்சள் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அவருக்கு சந்தன குங்குமம் இட்டு வீட்டு பூஜை அறையில் வைத்து தீப ஏற்றி கற்பூரம் தூப தீப ஆராதனை அனைத்தும் காட்ட வேண்டும். பிறகு வீட்டு நிலை வாசல் கதவில் மேலே இந்த விநாயகரை வைக்க வேண்டும். அவரை வைப்பதற்கு ஏற்றார் போல் ஒரு ஸ்டாண்ட் அமைத்துக் கொண்டு அதற்கு மேல் வைக்கலாம். அப்படி வைத்த பிறகு தினமும் அவருக்கு காலையிலும் மாலையிலும் ஊதுபத்தி தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.

நிலை வாசலில் வைக்க வசதி இல்லாதவர்கள் வாசல் கதவை திறந்ததும் பார்க்கும் படி இருக்கும் இடத்தில் ஒரு ஸ்டாண்டை வைத்து அதன் மேல் விநாயகரை வைக்கலாம். அப்படி வைக்கும் பொழுது அவருக்கு என்று ஒரு தீபத்தையும் ஏற்றி வைத்து வழிபடலாம். தினமும் அவருக்கு மலர்களையும், அருகம்புல்லையும் சாற்றி தீபமேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல்கள் நீங்கினால் கண்டிப்பான முறையில் நேர்மறை ஆற்றல்கள் அந்த வீட்டிற்குள் வந்துவிடும். நேர்மறை ஆற்றல்கள் வந்தால் நாம் தொட்ட காரியம் அனைத்திலும் நம்மால் வெற்றி அடைய முடியும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பிலிருந்து அனைத்திலும் சிறப்பாக விளங்குவார்கள். எந்தவித குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடக்கும்.

இதையும் படிக்கலாமே: வீடு கட்ட அபிராமி அந்தாதி பதிகம்

மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய இந்த வெள்ளருக்கு விநாயகரை நம்பிக்கையுடன் வாங்கி வந்து வழிபட நம் வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -