உளுந்து சேர்க்காமல் புதினா சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! செம டேஸ்ட்டா இருக்கும்.

puthina-chutney
- Advertisement -

புதினா சட்னி என்றாலே அதற்கு உளுந்து மிகவும் முக்கியம். உளுந்து தான் புதினா சட்னியை கெட்டியாக மற்றும் சுவையாக கொடுப்பதற்கு உதவுகிறது. ஆனால் இந்த சட்னி உளுந்து எதுவும் சேர்க்காமல், வெங்காயம் சேர்த்து செய்யப்படுகிறது. ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும் இந்த புதினா சட்னி வித்தியாசமான சுவையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள ரொம்பவே ருசியாக இருக்கும். நீங்களும் இதே முறையில் எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

puthina

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 5, பெரிய வெங்காயம் – 1, புதினா – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – கால் கப், பொட்டுக் கடலை – கால் கப், உப்பு – தேவையான அளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் புதினா சட்னி அரைக்க தேவையான புதினாவை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும். புதினாவை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு முறை கைகளால் தட்டி விட்டு பின்னர் அதன் இலைகளைக் கிள்ளி எடுப்பது நல்லது. அப்போது தான் அதில் ஒட்டியிருக்கும் சிறு சிறு வண்டுகள் கூட கீழே விழுந்துவிடும். மஞ்சளாக இருக்கும் இலைகளை சேர்க்கக் கூடாது. பின்னர் நன்கு தண்ணீரில் நான்கு முறை அலசி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

puthina-thuvaiyal1

பெரிய வெங்காயம் ஒன்றை உரித்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காயை பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய்களை போடவும். பச்சை மிளகாய் வெடிக்கும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பின்னர் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கி வந்ததும் அதில் ஒரு கட்டு புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கினால் விரைவாக புதினா இலைகள் சுருங்கி விடும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு ஆற விட வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள், இவற்றுடன் கால் கப் அளவிற்கு தேங்காய்த் துருவல், அதே அளவிற்கு பொட்டு கடலை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மிக்ஸியை இயக்கி நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்து இந்த விழுதினை இப்பொழுது தாளிக்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விட வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உறுவி சேர்த்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை சுருங்கியது சட்னியில் தாளித்ததை கொட்டி சுடச்சுட இட்லி, தோசை, பூரிக்கு பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும் இந்த புதினா சட்னி நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -