புதிதாக தோட்டம் வைப்பவர்கள் கூட இந்த இயற்கை உரமான தேமோர் கரைச்சலை புழு வண்டுகள் வைக்காமல் எப்படி தயாரிப்பது என்பதை தெரிஞ்கிட்டா போதும், பெரிய தோட்டத்தையே சாதாரணமாக வளர்த்து விடலாம்.

- Advertisement -

செடிகள் நல்ல முறையில் வளர ஒரு சிறந்த ஒரு உர ஊக்கி தான் இந்த தேமோர் கரைசல். எப்பேர்பட்ட செடிகளுக்கும் இந்த தேமோர் கரைச்சலை பயன்படுத்தும் போது செடியின் வளர்ச்சியானது நன்றாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பூ, காய் போன்றவைகளையும் நல்ல தரமான முறையில் பயிர் செய்ய இந்த தேமோர் கரைசல் உதவி செய்யும். இப்போது இந்த உரத்தை தயாரிக்கும் போது இதில் புழு,வண்டுகள் வராமல் எப்படி தயாரிப்பது என்பதை இந்த வீட்டுத் தோட்டம் பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த தேமோர் கரைச்சலை இயற்கையான முறையில் பயிரிட்டு விவசாயம் செய்பவர்கள் அனைவருமே பயன்படுத்தி வந்த ஒரு பழமையான முறை தான். தேமோர் கரைச்சலை பயன்படுத்தும் போது குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலும் மாடித் தோட்டம் வீட்டில் செடி வளர்ப்பவர்கள் என அனைவருமே இந்த தேமோர் கரைச்சலை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஒரு செடியானது நன்றாக செழித்து வளர தேவையான அத்தனை சத்துக்களையும் இந்த தேமோர் கரைச்சல் மூலம் நம்மால் கொடுக்க முடியும்.

- Advertisement -

முதலில் தேமோர் கரைச்சலை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நன்றாக புளித்த மோர் வேண்டும். இந்த மோர் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறோமோ, அதே அளவிற்கு தேங்காய் அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து ஒரு வாரம் வரையில் மூடி போட்டு அப்படியே வைத்தால் இரண்டுமே புளித்து வரும். இது தான் தேமோர் கரைசல்.

இந்த தேமோர் கரைச்சலை செடிகளுக்கு கொடுக்கும் போது ஒரு பங்கு தேமோர் கரைசலுக்கு ஐந்து பங்கு அளவிற்கு தண்ணீர் கலந்து உரமாக கொடுக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு கொடுத்து வரும் போது, இது செடிகளுக்கு உரமாக மட்டுமில்லாமல், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த தேமோர் கரைசல் தெளிக்கும் போது செடிகளில் மகரந்த சேர்க்கையும் நடைபெறும்.

- Advertisement -

இப்போது இந்த தேமோர் கரைச்சலை புழு, வண்டுகள் இல்லாமல் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம். தேங்காய் பாலையும், மோரையும் கலந்த இந்த கரைச்சலை வெறும் பாத்திரத்தில் ஊற்றி தட்டு போட்டு மூடி அப்படியே வைத்து விடுவார்கள். இது தான் பொதுவாக தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை. ஆனால் அப்படி செய்யாமல் ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் தேமோர் கரைச்சலை ஊற்றி தினமும் ஒரு முறை குலுக்கி வைக்க வேண்டும். மூடி இருப்பதால் இதற்குள் காற்று சென்று புழு பூச்சிகள் உருவாவது தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் ஒரே நிலையில் வைக்காமல் தினமும் இதை கலக்கி விடுவதால் இதில் புழு, பூச்சிகள் உருவாவதற்கான முட்டைகள் இருந்தாலும் அவைகள் உடைந்து விடும்.

இதையும் படிக்கலாமே செடி வளர்க்க ஆசைபடுபவர்கள் இந்த முறையில் விதைத்து பாருங்கள், ஒரு விதை கூட வீணாகாமல் அனைத்துமே முளைத்து செடிகள் நன்றாக செழித்து வளரும்.

தேமோர் கரைச்சலை தெளிக்கும் முன்னே புழு, வண்டுகள் இருந்தால் அதை தெளிக்கும் போது செடிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இனி இந்த முறையில் தயாரித்து செடிகளுக்கு கொடுக்கும் போது இன்னும் நல்ல பலனை கொடுக்கும். மூடி வைத்த நிலையில் இதனுடைய காற்றும் வெளியில் செல்லாமல் இதன் சத்தும் இன்னும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -