செடி வளர்க்க ஆசைபடுபவர்கள் இந்த முறையில் விதைத்து பாருங்கள், ஒரு விதை கூட வீணாகாமல் அனைத்துமே முளைத்து செடிகள் நன்றாக செழித்து வளரும்.

- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களாக இருந்தாலும், ஒன்று இரண்டு செடிகள் மட்டுமே வைத்து வளர்ப்பார்கள் இருந்தாலும் அதை சரியான முறையில் பயிரிட்டால் தான் விதைக்கும் செடிகள் அனைத்தும் முளைத்து வரும். செடி வளர்க்க வேண்டும் என்று ஆசை பட்டு தான் விதைகளை வாங்கி வந்து விதைப்போம். நாம் விதைக்கும் அத்தனையும் முளைத்து வருவது இல்லை, சில நேரங்களில் ஒன்று கூட முளைக்காது. அதற்கான காரணங்களை என்ன வென்று தெரிந்து கொண்டு அதை எப்படி சரியான முறையில் விதைப்பது என்பதையும் இந்த வீட்டு தோட்டம் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் விதைகளை தேர்வு செய்யும் போது நல்ல தரமான விதைகளாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும் முடிந்த வரையில் நாட்டு விதைகளாக வாங்கினால் நல்லது. அது மட்டுமின்றி நாட்பட்ட விதைகளை வாங்கி விதைத்தாலும் அவைகள் முளைக்காது. எனவே விதைகளை வாங்கும் போது கவனமாக தேர்வு செய்து வாங்க வேண்டும்.

- Advertisement -

விதைகள் சிறிய விதைகளாக இருந்தால் குறைந்தது இரண்டு மணி நேரமும், கொஞ்சம் பெரிய விதைகளாக இருந்தால் ஒரு நாள் வரையிலும் தண்ணீரில் ஊற வைத்த பிறகே விதைக்க வேண்டும். இப்படி செய்யும் போது தான் செடிகள் விரைவில் முளைத்து வரும்.

விதைக்கும் முன்பே விதைகளை உரங்களில் ஒரு முறை கலந்த பின் தான் விதைக்க வேண்டும். இந்த உரங்கள் கடைகளிலும் கிடைக்கும், அல்லது நாம் வீட்டில் தயாரிக்கும் பஞ்சகாவியா போன்ற உரங்களில் கூட இதை சிறிது நேரம் ஊற வைத்து அதன் பிறகு விதைத்தால் செடிகள் நன்றாக முளைத்து வரும்.

- Advertisement -

அதே போல் விதைகளை மண்ணில் நடும் போது விதையின் அளவை விட இரண்டு மடங்கு ஆழத்தில் மட்டும் தான் நட வேண்டும். மிக மேலே விதைகள் தெரிந்தாலும் சூரிய ஒளி பட்டு கருகி வராமல் போய் விடும். அதே நேரத்தில் ஆழமாக விதைத்து விட்டாலும், செடிகள் முளைத்து வெளிவர சிரமமாக இருக்கும்

விதைத்தவுடன் அடுத்து செய்யும் மிகப் பெரிய தவறு தண்ணீரை அதிகமாக ஊற்றி விடுவது. மணல் ஈரப்பதமாக இருக்க வேண்டுமே தவிர தண்ணீர் அதிகமாக தேங்க கூடாது. மண்ணில் ஈரம் காயும் தருவாயில் தண்ணீர் தெளித்து விட்டால் போதும். இந்த விதைகள் முளைத்து வரும் வரை செடிகளுக்கு தண்ணீர் கையில் தெளித்தால் நல்லது.

- Advertisement -

அடுத்த செடிகள் முளைத்து வரும் வரை அதை வெயில் படும் இடத்தில் வைக்க கூடாது. வெயிலின் நிழல் படும் இடத்தில் தான் வைக்க வேண்டும். ஒரு வேளை வெயிலில் வைக்க நேர்ந்தால் என்றால் அதற்கு மேல் ஒரு கவர் பிளாஸ்டிக் போன்ற ஏதாவது ஒன்றை அதன் மேல் மூடி வைத்து தான் வளர்க்க வேண்டும். வெயில் நேரடியாக விதைகளில் மீது படும் போது செடிகள் முளைக்கவே செய்யாது. அது மட்டும் இன்றி இப்படி மாடியில் வைப்பவர்கள் அந்த விதைகளை மூடாமல் வைத்து விட்டால் எலி, அணில் போன்றவை எல்லாம் விதைகளை தின்று விடும் நமக்கே தெரியாது விதைகள் முளைக்கவில்லையே என்று யோசிப்போம்.

இதையும் படிக்கலாமே வெறும் ஐந்து ரூபாய் செலவில் செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சிகள் அனைத்தையும் காணாமல் செய்து விடலாம். அப்புறம் என்ன கலர் கலரா செம்பருத்தி பூ செடி வாங்கி வளர்க்க வேண்டியது தானே.

இந்த சின்ன சின்ன விஷயங்களை தெரிந்து கொண்டு இனி நீங்கள் விதைக்கும் போது இந்த முறைகளில் கவனமாக விதைத்து பாருங்கள். ஒரு விதை கூட வீணாகாமல் நீங்கள் விதைத்து அனைத்துமே முளைத்து இருக்கும்.

- Advertisement -