ராகு கேது தோஷம் நீங்க பிரதோஷ வழிபாடு

sivan kethu ragu
- Advertisement -

சிவபெருமானுக்குரிய வழிபாடுகளில் முக்கியமானது பிரதோஷ வழிபாடு தான். இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரும். ஒன்று தேய்பிறை திரியோதசி திதியில் வரும். மற்றொன்று வளர்பிறை திரியோதசி திதியில் வரும். இந்த இரண்டு பிரதோஷங்களையும் தவறாமல் கடைபிடித்து வரும் ஒருவர் தன் வாழ்நாளில் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் இந்த பிறவியிலேயே கழித்து விடுவதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அத்தகை சிறப்பு வாய்ந்த இந்த பிரதோஷம் இன்று ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இது மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது எப்படி என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது தோஷம் நீங்க பிரதோஷ வழிபாடு

முதலில் பிரதோஷம் விரதம் எதற்காக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்கள் தோஷங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை நல்ல முறையில் வாழ வைப்பது தான் இந்த பிரதோஷ விரதம் முக்கிய சாராம்சம். அப்படியான இந்த பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

- Advertisement -

பிரதோஷ காலம் என்பது மாலை நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரை. ஞாயிற்றுக்கிழமை இந்த நேரமானது ராகு கால நேரம். ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் தான் மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் ராகு காலம் வரும். அந்த நேரத்தில் நாம் இந்த வழிபாடு செய்யும் பொழுது ராகு கேது தோஷங்கள் விலகுவதுடன் பிற தோஷங்களும் நீங்கும்.

பிரதோஷ விரதம் என்பது நாள் முழுவதும் உண்ணாமல் இருந்து மாலை பிரதோஷ வழிபாடு முடித்த பிறகு உண்பது தான். இது அனைவராலும் முடியாது. ஆகையால் பால், பழம் உண்டு விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் எளிமையான உணவை உண்டு இருக்கலாம். அசைவத்தை நிச்சயமாக தவிர்த்து விட வேண்டும். அன்றைய தினம் மாலை பிரதோஷ வழிபாடு நேரத்தில் தவறாமல் அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு செல்லுங்கள்.

- Advertisement -

இந்த ஞாயிற்றுக்கிழமை ஆதலால் பெரும்பாலும் அனைவருக்கும் விடுமுறை ஆகத்தான் இருக்கும். ஆகவே இந்த நாளை தவிர விடாமல் நிச்சயம் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். அப்படி கலந்து கொள்ளும் பொழுது எம்பெருமானுக்கு வில்வம், பால், பழம், தேன், பேரீச்சம்பழம் என உங்களால் என்ன முடிகிறதோ அதை வாங்கி கொடுங்கள். இந்த பிரதோஷ அபிஷேகம் அலங்காரங்கள் அனைத்தையும் கண்ணாற கண்டு கலியுங்கள்.

ஏனெனில் இறைவனை நாம் எவ்வளவு அழகாக அலங்கரிக்கிறோமோ எவ்வளவு அழகாக பார்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அழகாக அவரும் நம்மை பார்த்துக் கொள்வார் என்பது ஐதீகம். ஆகையால் உங்களால் முடிந்த அளவிற்கு அலங்காரத்திற்கும் அபிஷேகத்திற்கும் பொருட்களை வாங்கி கொடுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் நிலைமையை பல மடங்கு மாற்றி உயர்த்தும்.

- Advertisement -

இப்படி அபிஷேகம் அலங்காரங்களை பார்க்கும் பொழுது ஓம் நமசிவாய என்ற அவருடைய இந்த நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள். இந்த ஒரு வார்த்தை போதும் உங்களின் தலையெழுத்தையே மாற்ற. அப்படியான இறைவனை இந்த ராகு கால நேரத்தில் அவரை நினைத்து வணங்கும் போது ராகு கேது தோஷம் மட்டுமல்ல வேறு எந்த தோஷங்கள் எதுவும் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதை உறுதியாக நம்பலாம்.

இந்த வழிபாட்டை ஆலயத்தில் சென்று செய்ய முடியாது என்பவர்கள் வீட்டில் சிவபெருமான் படம் லிங்கம் இருந்தால் அதற்கு மலர் சூடி அபிஷேகங்கள் செய்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபம் கிழக்கு முகமாக எரியட்டும் நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து பிரதோஷ காலத்தில் ஓம் நமசிவாய என்ற நாமத்தை மட்டும் மனதார சிவபெருமானை நினைத்து சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: கேது பகவான் தாக்கம் குறைய ஜீவசமாதி வழிபாடு.

இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது உங்களின் சகல தோஷங்களையும் நீக்கி எம்பெருமான் உங்களை பலரும் ஆச்சரியப்படும் வகையில் உயர்த்தி வாழ வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் வாய்ப்பிருப்பவர்கள் நாளைய பிரதோஷ தினத்தை தவறாமல் பயன்படுத்தி பலன் அடையுங்கள் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -