எளிமையான முறையில் சாஃப்டான பஞ்சு போன்ற ராகி இட்லிக்கு என்ன செய்யணும்? அடிக்கடி ராகி இட்லி சாப்பிட்டால் எலும்பு தேய்மானமே வராது தெரியுமா?

ragi-idli-maavu
- Advertisement -

ராகியில் இருக்கும் கால்சியம் சத்து நம்முடைய எலும்பை தேயாமல் வலுவாக்குகிறது. இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. அந்த வகையில் எளிமையான முறையில் மெத்தென்ற பஞ்சு போன்ற இட்லி ஆரோக்கியம் நிறைந்ததாக எப்படி சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிப்பது? அதற்கான அளவுகள் என்னென்ன? முறையாக அதை செய்ய வேண்டிய வழிமுறை என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ராகி இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
ராகி – ஒரு கப், இட்லி – அரிசி அரை கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ராகி இட்லி செய்முறை விளக்கம்:
ராகி இட்லி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு ராகியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கேழ்வரகுடன் அரைக் கப் அளவிற்கு இட்லி அரிசி மற்றும் உளுந்து அரை கப் சேர்க்க வேண்டும். எந்த கப்பில் நீங்கள் ராகியை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து நன்கு மூன்று, நான்கு முறை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

அலசி சுத்தம் செய்த பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற விட வேண்டும். அனைத்தும் நன்கு உறிய பின்பு கிரைண்டர் அல்லது மிக்ஸியை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ, அவ்வளவு நைசாக மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த மாவை ஆறு மணி நேரம் கண்டிப்பாக புளிக்க விட வேண்டும். அதற்கு மேல் அதிகமாக புளிக்க விட வேண்டாம்.

- Advertisement -

நன்கு புளித்து நுரை கட்டி இருக்கும். இதை ஒரு முறை நன்கு கலந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக மாவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக இட்லி அவிக்க 8 நிமிடம் எடுக்கும். ஆனால் இந்த ராகி இட்லி 15 நிமிடம் அவித்து எடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விட வேண்டாம். இட்லி பானையில் ஒவ்வொரு குழிகளிலும் இந்த மாவை எடுத்து ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு நன்கு ஆவியிலேயே வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக சாத்தான பஞ்சு போன்ற ஆரோக்கியம் நிறைந்த ராகி இட்லி தயார்!

கேழ்வரகு அதிக சத்துக்களை கொண்டுள்ளது. இதை பண்டைய காலத்தில் நிறையவே பயன்படுத்தி வந்தனர் ஆனால் இப்போது இதன் பயன்பாடு குறைந்து விட்டது. இந்த மாதிரியான முறையில் நீங்கள் ராகி இட்லி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று தட்டிக் கழிக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே இதே மாதிரி நீங்களும் சுவையான ஆரோக்கியம் நிறைந்த பஞ்சு போன்ற கேழ்வரகு இட்லி தயாரித்து பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லோரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -