பெருமழை குறித்து கணித்து கூறிய பஞ்சாங்கம். அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்

Rain

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அதில் 32 ஆவதாக வருவது “விளம்பி வருடம்” ஆகும். வானியல் சாத்திரத்தை கொண்டு கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள் மற்றும் பல விடயங்களை அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் பஞ்சாங்கம் பலன் எழுதப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த “விளம்பி” ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மழை நன்கு பொழிந்து அனைத்து ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் நிறையும் என்று விளம்பி ஆண்டு பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Panchangam 2018

நமது நாட்டில் தென்மேற்கு பருவ மழை காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது. அதன் படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தொடக்ககாலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் பிறகு மேற்கு பகுதி மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பெருமழை பொழிந்து, அங்கே உதிக்கும் காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, அக்காவிரி நீர் தமிழக பகுதியில் இருக்கும் அணைகளையும் நிரப்பி, தற்போது நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.பொதிகை மலையில் உற்பத்தியாகும் “தாமிரபரணி” ஆறும் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரையின் “வைகை” நதியும் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஓடக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

தற்போது இந்த தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் மிக அதிகளவு பொழிந்து, அம்மாநிலத்தின் அனைத்து ஆறுகளும் நிறைந்து, பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதே போல் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாத காலகட்டத்திற்குள் தமிழகத்திலும் மிக அதிகளவு மழை இருக்கும் என்றும் பஞ்சாங்கம் கூறுவதாக சில ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. வரும் புரட்டாசி மாதத்தில் பலத்த மழை இருக்கும் என்றும், அது போல கார்த்திகை மாத காலகட்டத்தில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேர தொடர் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் கருத இடமுண்டு எனவும் கூறுகிறார்கள்.

rain

கிரக கோட்சாரங்களின் படி “நீர்” கிரகமான “சந்திரனுக்கு” தெற்கில் வியாழன் கிரகம் சஞ்சரிப்பதால் அதிகளவு மழை பொழியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டதை போலவே சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் அதிக மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:
விளம்பி வருடம் பற்றிய பஞ்சாங்க கணிப்புகள்

இது போன்ற மேலும் பல பஞ்சாங்கம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.