மழைக்காலத்தில் துணிகளை காயப்போட இப்படியும் ஒரு வழி உள்ளதா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

cloth-drying2
- Advertisement -

பூமிக்கு மழை என்பது மிகவும் முக்கியம் தான். ஆனால் மழைக்காலம் வந்து விட்டாலே நமக்கு ஒருபுறம் எரிச்சலாகவே இருக்கும். எங்கு பார்த்தாலும் வீடே கசகசவென்று ஒரு மாதிரியான வெறுப்பை உண்டாக்குகிறது. எந்த இடத்திலும் ஈரப்பதம் நம்முடைய சாதாரண சூழ்நிலையை கூட மாற்றி விடுகிறது. துணியை துவைத்து காய போட்டால் உடனே மழையும் வந்துவிடும். போட்ட துணியை மீண்டும் எடுத்து வீட்டில் எங்காவது காயப்போட இடம் தேடிக் கொண்டிருப்போம். மழைக்காலத்திற்கு வீட்டில் சில இடங்களில் ஈரப்பதம் காரணமாக துர்நாற்றமும் வீசும். இதில் இருந்து எப்படி தப்பிப்பது? என்பதற்கான சிறந்த வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

rain

மழைக்காலத்தில் ஈரமான துணியை காயப்போடுவதற்கு இனி கயிறுகளை ஆங்காங்கே அசிங்கமாக கட்டிப் போட வேண்டாம். வீடு முழுவதும் கொடி கயிறுகள் இருந்தால், அந்த வீட்டிலேயே இருப்பதற்கு நமக்கு இடைஞ்சலாக போய்விடும். யாராவது வீட்டிற்கு வந்தாலும் அது அசிங்கமாக தெரியும். இதற்கு பதிலாக கொடி கயிற்றை நேரடியாக ஆணியில் கட்டாமல் இது போல் செய்யலாம்.

- Advertisement -

நம் வீட்டில் எஸ் போன்ற அமைப்பில் இரும்பிலான ஊக்கு நிச்சயம் வைத்திருப்போம். இல்லை என்றால் அதை வாங்கி வையுங்கள். இந்த ஊக்கின் ஒரு புறம் கயிற்றை கட்டிக் கொள்ளவும். அது போல் கயிற்றின் இரு முனைகளிலும் செய்யவும். ஊக்கின் இன்னொரு முனையை நீங்கள் எங்கு மாட்ட விரும்புகிறீர்களோ! அந்த இடத்தில் மாட்டி வைத்து விடலாம். ஒரு ஜன்னலில் இருந்து இன்னொரு ஜன்னலுக்கு கூட எளிதாக இந்த முறையை பயன்படுத்தி மாட்டி விடலாம்.

s-hook

துணி காயப்போட தேவையான பொழுது அந்தக் கயிறை பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரங்களில் அதனை எளிதாக எடுத்து சுருட்டி ஓரமாக வைத்து விடலாம். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படாது. இரவு நேரத்தில் இது போல் செய்த காய வைத்து காலையில் பார்த்தால் எல்லா துணிகளும் சுலபமாக காய்ந்து விட்டிருக்கும். கொடி கயிறையும் நாம் அப்படியே விட்டு வைக்க தேவையில்லை என்பதால் வீடும் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

வீட்டில் நீங்கள் பாத்திரம் கழுவும் இடத்தில் துர்நாற்றம் வீசினால் இந்த டிப்ஸை ஃபாலோ செய்து பாருங்கள். ஒரு பாட்டில் எடுத்து அதில் 4 டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா போட்டுக் கொள்ளவும். அதில் கால் டம்ளர் அளவிற்கு வினிகர் ஊற்றி காற்று வெளியேறாமல் உங்களுடைய சிங்கின் ஓட்டைக்குள் சட்டென ஊற்றி விடுங்கள். சிங்கிள் இருக்கும் அடைப்புகளை இந்த கலவை முழுமையாக நீக்கி வெளியே தள்ளிவிடும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு தண்ணீர் குழாயை திறந்து விட்டு விடுங்கள். அடைப்புகள் நீங்கி சிங்கிள் இருந்து வரும் நாற்றம் போயே போய் விடும்.

baking-soda5

மழைக்காலங்களில் பொதுவாகவே மூடி வைத்திருக்கும் இடங்களெல்லாம் ஒருவிதமான வாடையை கொடுக்கும். ஒரு மணி நேரம் ஆவது சமையலறை கபோர்டுகள், துணி மணிகள் மடித்து வைத்திருக்கும் பீரோக்கள் போன்றவற்றை திறந்து வைத்து விடுங்கள். வெளிக்காற்று உள்ளே செல்லும் பொழுது அதிலிருந்து வரும் துர்நாற்றமும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கும் குப்பையை விட, புதுசா வாங்கின பூந்துடைப்பத்தால் வரும் புழுதியை சுலபமாக 5 நிமிடத்தில் சரி செய்ய என்ன வழி?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -