ராமர் பாலம் உண்மை தான் – ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள்

ramar-palam3
- Advertisement -

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இது மனிதர்களால் கட்டப்பட்டிருப்பது உண்மைதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ram sedhu

புராணங்களின்படி வானர படையினரால் ராமர் பாலம் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கையைச் சென்றடைய உருவாக்கப்பட்டதுதான் இப்பாலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ராமர் பாலம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர். ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று ஒருத்தரப்பினரும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், `ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது கட்டுக்கதையல்ல’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

ramar palam

ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது:

- Advertisement -

ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றார்.

இதையும் படிக்கலாமே :
ராமர் பாலத்தை பற்றி பலரும் அறியாத சில திடுக்கிடும் உண்மைகள்

- Advertisement -

ராமர் பாலம் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்ட வீடியோ இதோ :

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -