பர்ஃபெக்ட் ரேஷியோவில் மணக்க மணக்க ரசம் வைக்க ரசம் பொடி சுலபமாக வீட்டில் அரைப்பது எப்படி?

rasa-podi-rasam
- Advertisement -

ரசப்பொடி செய்வது எப்படி | Rasam podi recipe Tamil

இருப்பதிலேயே மிகவும் நுட்பமாக சமைக்க வேண்டிய ஒரு டிஷ் என்றால் அது ரசம் தான். எல்லோருக்கும் ரசம் வைக்க வந்து விடாது! ரசம் வைப்பது ஒரு கலை போல் இருக்கிறது. என்னதான் செஞ்சாலும் ரசம் மட்டும் சரியாக வைக்க வரலையே என்று புலம்புபவர்களுக்கு, இப்படி ரச பொடி அரைத்து ஈசியாக ஒரு முறை ரசம் செஞ்சு பாருங்க, 90% உங்க ரசம் இந்த பொடியிலேயே நல்லா வந்துவிடும். பர்ஃபெக்ட் ரேஷியோவில் மணக்க மணக்க ரச பொடி அரைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

தனியா விதைகள் – முக்கால் கப், துவரம் பருப்பு – கால் கப், சீரகம் – மூன்று டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், வரமிளகாய் – 100 கிராம், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பச்சை கருவேப்பிலை – அரை கைப்பிடி, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – ஒரு துண்டு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். முக்கால் கப் அளவிற்கு தனியா விதைகளை பிரஷ்ஷாக சேர்த்து வாசம் வர லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பேன் சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். லேசாக வாசம் வர ஆரம்பித்ததும் தனியாவை தனியாக எடுத்து வைத்து விடலாம். பின்னர் அதே பேனில் அதே கப்பில் கால் கப் அளவிற்கு துவரம் பருப்பு எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

துவரம் பருப்பு வறுக்கும் பொழுது லேசாக நிறம் மாறி நல்ல வாசம் வரும். இந்த சமயத்தில் நீங்கள் இதனை வறுத்து வைத்த பொருட்களுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின் பேனில் மூன்று ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். சீரகம் வறுக்கும் பொழுது பொரிய ஆரம்பிக்கும், அந்த சமயத்தில் பொரியும் முன்னர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அதையும் லேசாக ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நன்கு மொர மொரப்பாக இருக்கக்கூடிய வர மிளகாய் 20 லிருந்து 25 வரை காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள். வதக்கும் பொழுதே உப்பி வர ஆரம்பிக்கும். மிளகாயின் நிறம் மாறுவதற்கு முன்னரே எடுத்து விட வேண்டும். பின் வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். வெந்தயம் லேசாக வறுக்க நிறம் மாற கூடாது, நல்ல வாசம் வர ஆரம்பிக்கும், அந்த ஸ்டேஜில் எடுத்து விடுங்கள். பின் அரை கைப்பிடி அளவிற்கு பச்சை கருவேப்பிலைகளை போட்டு மொறு மொறுப்பாக ஆகும் வரை லேசாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மொறு மொறு கிரிஸ்பியான ஆரோக்கியம் நிறைந்த பண்டிகை ஸ்பெஷல் மிளகு வடை ரொம்ப ஈஸியாக 4 பொருள் வைத்து எப்படி செய்வது?

கடைசியாக ஒரு ஸ்பூன் மட்டும் நல்லெண்ணெய் விட்டு ஒரு இன்ச் அளவிற்கு பெருங்காய கட்டியை உடைத்து சேர்த்து லேசாக வதக்குங்கள். பெருங்காயம் வெள்ளை நிறமாக மாற ஆரம்பிக்கும, இந்த ஸ்டேஜில் அடுப்பை அணைத்து பெருங்காயத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது வறுத்து எடுத்து வைத்த எல்லா பொருட்களையும் நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -