தொழிலில் அமோக வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்

Astrology

உங்களுடைய தொழில் அமோக வரள்ச்சி பெற, வியாபாரம் சிறக்க, பணிகளில் உயர் பதவி கிடைக்க ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டிய மிக மிக எளிய பரிகாரங்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

மேஷம்

Mesham Rasi

நீங்கள் சிறிது தூய்மையான மஞ்சளை நீரில் கரைத்து, ஒரு சிகப்பு நிற காகிதத்தின் மேல் லாபம் என்று மஞ்சளில் எழுதி, அதனை மடித்து உங்கள் பணப் பெட்டியிலோ அல்லது கல்லாப்பெட்டியிலோ வைத்தால் உங்களின் பணவரவு அதிகரிக்கும்.

ரிஷபம்

நீங்கள் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் லட்சுமி நாராயணர் கோவில் அல்லது மகாலட்சுமி தாயாரின் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வந்தால் உங்களின் பணவரவு அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்

Mithunam Rasi

உங்கள் குலதெய்வத்தை தினமும் நினைத்து, வணங்கி, பூஜை செய்து  வந்தீர்கள் ஆனால் உங்களின் பணவரவு அதிகரிக்கும்.

கடகம்

Kadagam Rasi

நீங்கள் ஒரு சிறு துண்டு கற்பூரத்தை ஏற்றி அதில் சிறிது செந்தூரத்தையும் சேர்த்து எரிய வைத்து பின்பு அந்த சாம்பலை எடுத்து ஒரு வெள்ளை காகிதத்தில் மடித்து உங்கள் கல்லாப் பெட்டியில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.

சிம்மம்

simmam

நீங்கள் எந்த இடத்தில் உங்கள் வியாபாரத்தை செய்கிறீர்களோ, அந்த வாயிற்படியில் உள்ளே செல்லும் பொழுதும், வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பொழுதும் வாயிற்படியை மூன்று முறை தொட்டு கும்பிடவேண்டும்.

கன்னி

Kanni Rasi

நீங்கள் தொழில் செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால் உங்கள் பணவரவு அதிகரிக்கும். குலதெய்வத்தை வழிபட்டு விட்டு வியாபாரத்தை தொடங்குவது நல்லது.

துலாம்

Thulam Rasi

உங்கள் வீட்டில் உள்ள உறவுகளை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவர்களின் மன நிம்மதியும், அவர்களால் உங்களுக்கு கிடைக்கப்படும் ஆசியும் உங்கள் தொழிலில் வெற்றி பெற்றுத்தந்து பண வரவை அதிகரிக்கும்.

விருச்சிகம்

Virichigam Rasi

உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு, வீட்டிலிருந்து புறப்படும் முன்பு ஐந்து நிமிடம் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்துவிட்டு புறப்பட்டால் உங்கள் தொழிலில் பணவரவு அதிகரிக்கும்.

தனுசு

Dhanusu Rasi

நீங்கள் காலையில் உணவு உண்பதற்கு முன்பு ஒரு பசுவிற்கோ அல்லது காக்கை, குருவிகளுக்கோ உணவினை அளித்துவிட்டு நீங்கள் சாப்பிட்டால் உங்கள் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்.

மகரம்

Magaram rasi

நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் காமாட்சி அம்மனுக்கு காலையும் மாலையும் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உங்கள் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்

Kumbam Rasi

நீங்கள் வியாபாரத்திற்கு செல்லும் முன்பு சிறிது சர்க்கரையையோ அல்லது அரிசி மாவையோ எடுத்து ஈ, எறும்புகளுக்கு உணவாக அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

Meenam Rasi

நீங்கள் வியாபாரத்தில் லாபம் அடைய ஆதரவற்ற முதியோருக்கு வஸ்திர தானம் செய்யலாம். ஏழை குழந்தைகள் படிப்பதற்காக உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.