விகாரி ஆண்டில் சொந்த வீடு, நிலம் பெற போகும் ராசியினர் யார் தெரியுமா?

vikari-podhu-palan

உலகின் பல தொன்மையான நாகரிகங்களில் வருடங்களை முறையாக கணக்கிட்டு, அந்த வருடங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர்களைச் சூட்டும் வழக்கம் இருக்கிறது. அந்த வகையில் தமிழர்கள் வருடங்களை 60 ஆண்டு கால சுழற்சியில் கணக்கிடுகின்றனர். அதில் 33 ஆவது ஆண்டாக “விகாரி” வருடம் பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் வருடமும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தருவதாகவே இருக்கிறது. அந்த வகையில் பிறந்திருக்கின்ற இந்த விகாரி ஆண்டில் எந்த ராசியினருக்கு சொந்த வீடு, நிலம் தொடர்பான லாபங்கள், அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசியயினருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சிறிதளவு பொருளாதார லாபங்கள் இருந்தாலும் பிற்பகுதியில் மிகுதியான வருமானங்கள் ஏற்படும். புதிய வீடு அல்லது வீட்டு மனைகள் வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்வதற்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலங்களையும் சிலர் வாங்குவார்கள். ஏற்கனவே வாங்கிய நிலங்களில் இருந்த வில்லங்கங்கள், வழக்குகள் போன்றவற்றில் சுமூகமான தீர்வுகள் ஏற்படும். வசிக்கின்ற வீட்டை விட வசதி மிகுந்த புதிய வீடு கட்டும் அமைப்பு ஏற்படும். விவசாயம், இயற்கை பண்ணை மற்றும் மூலிகை தோட்டம் போன்றவற்றின் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசியினருக்கு பிறந்திருக்கின்ற விகாரி புத்தாண்டில் அனைத்திலும் ஏற்றமிகு பலன்களே உண்டாகும். தொழில், வருமானங்களில் மிகுதியான லாபங்கள் கிடைக்கும். பூர்வீக நிலம், வீடு போன்ற சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உங்களுக்கான நியாயமான பாகம் கிடைக்கும். ஒரு சிலருக்கு மேலும் புதிய நிலம், வீடு வாங்கும் அமைப்பும் ஏற்படும். விவசாயம், பண்ணை தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலர் பழைய வீட்டை இடித்துவிட்டு ஆடம்பரமான புதிய வீட்டைக் கட்டுவார்கள். சிலர் கோயில்களுக்கு நிலங்களை தானம் செய்யவும் கூடும்.

மகரம்:
Magaram rasi

- Advertisement -

சனிபகவானின் சொந்த வீடாகவும், செவ்வாய் பகவானின் உச்ச வீடாகவும் இருக்கின்ற மகர ராசியினருக்கு இந்த ஆண்டு சிறந்த பலன்கள் உண்டாகும். தங்களுக்கு சொந்தமான, மிக நீண்ட காலமாக விற்பனையாகாமல் இருந்த நிலங்கள் விற்று நல்ல லாபங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வாரிசில்லாத உறவினர்கள் இறந்து அதன் மூலம் நிலம், வீடு போன்ற சொத்துக்கள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். ஒரு சிலர் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மாற்றங்கள், விரிவாக்கம் செய்வார்கள் சிலருக்கு புதிய நிலங்கள் வீட்டு மனைகள் வாங்கும் யோகம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்குமான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasis properties in Tamil. It is also called as Vikari aandu in Tamil or 12 rasi in Tamil or Jothidam rasi in Tamil or Vikari varudam in Tamil.